புதிய 4K டிஸ்ப்ளே உடன் Samsung யின் 100-இன்ச் பெரிய சைஸ் டிவி உடன் இந்தியாவில் அறிமுகம்
Samsung இந்தியாவில் புதிய விஷன் ஏஐ (Vision AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் Mini LED TV வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது
Samsung New Mini LED TV ஆரம்ப விலை இந்தியாவில் ₹42,990 ஆகும்.
Samsung New Mini LED TV சீரிசானது , 43 இன்ச் முதல் 100 இன்ச் வரையிலான பல்வேறு ஸ்க்ரீன் சைஸ்களில் டிவிகளைக் கொண்டுள்ளது
Samsung இந்தியாவில் புதிய விஷன் ஏஐ (Vision AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் Mini LED TV வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் AI சப்போர்டுடன் ஆன படம் மற்றும் மிக சிறந்த சவுண்ட் அம்சங்கள், மினி LED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மற்றும் மோஷன் எக்ஸலரேட்டர் 144Hz போன்ற கேமிங்கை மையமாகக் கொண்ட அம்சங்களுக்கான சப்போர்ட் உள்ளன. இந்த புதிய வரிசையில் NQ4 AI Gen2 ப்ரோசெசர் , சாம்சங் நாக்ஸ் பாதுகாப்பு, ஸ்மார்ட் திங்ஸ் ஒருங்கிணைப்பு, மற்றும் ஏழு ஆண்டுகள் வரையிலான ஓஎஸ் அப்டேட்களுடன் கூடிய ஒன் யுஐ டைசன் (One UI Tizen) ஆகியவையும் அடங்கும். இந்த டிவிகள் மேம்பட்ட கான்ட்ராஸ்ட், கலர் துல்லியம், மோஷன் ஹேண்ட்லிங் மற்றும் கனெக்டட் ஹோம் செயல்பாடுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் கூறுகிறது.
SurveySamsung New Mini LED TV விலை தகவல்.
Samsung New Mini LED TV ஆரம்ப விலை இந்தியாவில் ₹42,990 ஆகும். இந்த டிவிகள் நிறுவனத்தின் ரீடைளர் விற்பனைக் கடைகளிலும் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கின்றன. மேலும், இவை Samsung.com மற்றும் Flipkart ஆகியவற்றிலும் கிடைக்கின்றன.
Samsung New Mini LED TV சிறப்பம்சம்.
புதிய Samsung New Mini LED TV சீரிசானது , 43 இன்ச் முதல் 100 இன்ச் வரையிலான பல்வேறு ஸ்க்ரீன் சைஸ்களில் டிவிகளைக் கொண்டுள்ளது. துல்லியமான பேக்ரவுண்ட் கண்ட்ரோல் , அப்டேட் மாறுபாடு, தெளிவு மற்றும் ப்ரைட்னஸ் இவை சிறிய LED பயன்படுத்துகின்றன. பிக்சல் அளவிலான துல்லியம் மற்றும் வைட் வைட் கலரை உருவாக்குகிறது , இவற்றில் ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் அம்சம் உள்ளது. பாஸ்பர் தொழில்நுட்பம் 90 சதவீதத்திற்கும் அதிகமான பரந்த கலர் வரம்பை வழங்குகிறது. இந்த டிவிகளில், மேம்பட்ட மாறுபாடு மற்றும் வண்ணக் கையாளுதலுக்காக கலர் பூஸ்டர் மற்றும் மினி எல்இடி எச்டிஆர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை சிறந்த ஆழத்துடன் கூடிய விரிவான காட்சிகளை உருவாக்குகின்றன.
கேமிங் மற்றும் ஸ்போட்ஸ் கன்ட்டேன்ட்க்காக, Samsung New Mini LED TV மோஷன் எக்ஸலரேட்டர் 144Hz தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கின்றன . இது வேகமாக நகரும் காட்சிகளின் போது ஏற்படும் அசைவு மங்கலைக் குறைக்கிறது. இந்த அம்சம், ஃபிரேம்களுக்கு இடையேயான இயக்கத்தை மதிப்பிட்டு, அந்தத் தகவலைப் பயன்படுத்தி அடுத்தடுத்த ஃபிரேம்களில் இயக்கத்தின் மென்மையை மேம்படுத்துகிறது என்று சாம்சங் கூறுகிறது.
இதையும் படிங்க வெறும் ரூ,10,000 ஆரம்ப விலையில் Google 5.0 QLED TV அறிமுகம் செய்த Thomson அம்சம் என்ன பாருங்க
Samsung New Mini LED TV, சாம்சங்கின் NQ4 AI Gen2 ப்ரோசெசரில் இயக்கப்படுகின்றன. இது, ரியல்டைம் படம் மற்றும் சவுண்ட் அப்டேட் செய்வதற்க்கான 20-நியூரான் நியூரல் நெட்வொர்க் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தச் ஆப் , பல்வேறு பார்வைச் சூழல்களில் AI அப்ஸ்கேலிங், மேம்படுத்தப்பட்ட தெளிவு, சிறந்த கான்ட்ராஸ்ட் சரிசெய்தல் மற்றும் கன்டென்ட் உணர்ந்து செயலாக்குதல் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .
நிறுவனத்தின் கூற்றுப்படி, Samsung New Mini LED TV ஒன் யுஐ டைசன் இயங்குதளத்தில் இயங்குகின்றன, மேலும் அவற்றுக்கு ஏழு ஆண்டுகள் வரை ஓஎஸ் மேம்படுத்தல்கள் வழங்கப்படும். சாம்சங் நிறுவனம், சாம்சங் டிவி பிளஸ் சப்போர்டை இதனுடன் இணைத்துள்ளது. இது செய்திகள், திரைப்படங்கள், என்டர்டைமென்ட் மற்றும் தகவல் சார்ந்த நிகழ்ச்சிகளை கண்டேண்டல் , 14 மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஃபாஸ்ட் (FAST) சேனல்களுக்கான அக்சஸ் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile