அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் Oneplus யின் அசத்தலான TV

அடுத்த மாதம்  அறிமுகம் செய்யும் Oneplus யின் அசத்தலான TV

Oneplus நிறுவனம் தொலைக்காட்சிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய டி.வி.க்களுக்கான பெயர் மற்றும் லோகோவினை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் புதிய மாடல் ஒன்பிளஸ் டி.வி. பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய டி.வி. முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ ஒன்பிளஸ் டி.வி. செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என தெரிவித்தார்

கடந்த இரு ஆண்டுகளாக ஒன்பிளஸ் நிறுவனம் டி.வி.யை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது எங்களுக்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்த சாதனம் என அவர் தெரிவித்தார். 

புதிய டி.வி.க்கென பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களுடன் ஒன்பிளஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சியோமி தனது டி.வி.யில் பேட்ச்வால் இன்டர்ஃபேஸ் மூலம் பொழுதுபோக்கு சார்ந்த தரவுகளை வழங்கி வருகிறது. 

இதை கொண்டு ஒன்பிளஸ் டி.வி. அனுபவத்தை சிறப்பாக வழங்குவோம்,” என பீட் லௌ தெரிவித்தார்.“எங்களது குழுவினரின் கடும்முயற்சி மற்றும் நெவர் செட்டில் கோட்பாடிற்கு நன்றிகள். தலைசிறந்த அடித்தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.

புதிய ஒன்பிளஸ் டி.வி. சாம்சங் QLED டி.வி. மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் டி.வி. 4K ரெசல்யூஷனில் குவாண்டம் டாட் அல்லது QLED ஸ்கிரீன் பேனல்களை கொண்டிருக்கும் என்றும் இதில் கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளாட்ஃபார்ம் வழங்கப்படும் என பீட் லௌ தெரிவித்தார். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo