HIGHLIGHTS
புதிதாக அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது
50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
இரு டிவிக்களிலும் அமேசான் பயர் ஒஎஸ், 20 வாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், அலெக்சா வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. வாய்ஸ் ரிமோட் கொண்டு அலெக்சா மூலம் நிகழ்ச்சிகளை கேட்டு ஸ்டிரீம் செய்ய முடியும்.
Surveyஅமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் 50-இன்ச் மாடல் விலை ரூ. 29,999 என்றும் 55-இன்ச் மாடல் விலை ரூ. 34,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ஏற்கனவே அமேசான் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் 43-இன்ச் 4K, 43-இன்ச் புல் ஹெச்டி, 32-இன்ச் ஹெச்டி ரெடி மாடல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
மேலும் பயர் ஒஎஸ் கொண்டு பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், சோனிலிவ், வூட், டிஸ்கவரி பிளஸ் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்கலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile