வோடாபோனின் அசத்தல் புத்தம் புதிய இரண்டு சலுகை..

HIGHLIGHTS

வோடபோன் புதிய ரூ.229 சலுகை

பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங் மற்றும் தினமும் 100SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலைகைய அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகையில் டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

வோடபோன் புதிய ரூ.229 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங் மற்றும் தினமும் 100SMS  உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே செயலி மூலம் நேரலை டி.வி., மூவீ மற்றும் நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

புதிய சலுகையின் விலை ரூ.229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.139 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. ரூ.139 சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. முன்னதாக 4ஜி சிம் கார்டுகளை பயனர்கள் வீட்டிற்கே இலவசமாக விநியோகம் செய்யும் திட்டத்தை வோடபோன் அறிவித்தது.

ரூ.229 பிரீபெயிட் சலுகை வோடபோன் நிறுவன வெப்சைட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இச்சலுகை நாட்டின் முக்கிய வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே வழங்கப்படும் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1.5 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவையும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :