வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தரும் VI அசத்தலான சேவை அறிமுகம்.

HIGHLIGHTS

வோடஃபோன்-ஐடியா நிறுவனம் Vi Jobs and Education என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது

புதிய சேவைக்கு Vi appல் தனி டேப் கொடுக்கப்பட்டுள்ளது

விஐ செயலியிலேயே இந்த Vi Jobs and Education அம்சம் இடம்பெற்றிருக்கும்

வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தரும் VI அசத்தலான சேவை அறிமுகம்.

வோடஃபோன்-ஐடியா  நிறுவனம் Vi Jobs and Education என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலம் இந்திய இளைஞர்கள் எளிதாக வேலை தேட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை தேட உதவும். புதிய சேவைக்கு Vi appல் தனி டேப் கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சேவை நாட்டின் மிகப்பெரிய வேலை தேடல் தளமான அப்னா, ஆங்கிலம் கற்றல் பயன்பாடு, எங்குரு மற்றும் பரிக்ஷா ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.

விஐ செயலியிலேயே இந்த Vi Jobs and Education அம்சம் இடம்பெற்றிருக்கும். இந்த சேவைக்காக வோடஃபோன் நிறுவனம் அப்னா, என்குரு, பரிக்‌ஷா ஆகிய தளங்களுடன் இணைந்து செயல்படுகிறது. 

இந்த செயலி 3 வகையில் பயனர்களுக்கு உதவும் என வோடஃபோன் கூறியுள்ளது. இதன்படி, ஆங்கில மொழி பயிற்சி, அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இந்த சேவையில் வழங்கப்படும்.

அரசு தேர்வுக்கு படிப்பவர்களுக்கு பரிக்‌ஷா தளத்துடன் இணைந்து மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கான வகுப்புகள் ஒரு மாதத்திற்கு இலவசமாக நடத்தப்படும். அதன்பின் வகுப்பை தொடர விரும்புவோருக்கு வருடத்திற்கு ரூ.249 என்ற கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படும். இத்துடன் இடைவிடாத தேர்வுகள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகள் என்குரு நிறுவனத்துடன் இணைந்து 14 நாட்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்படும். அதன்பின் வகுப்பில் தொடர கட்டணம் செலுத்த வேண்டும். வோடஃபோன் வாடிக்கையாளர்கள் பயிற்சி வகுப்பில் சேர 15 சதவீதம் முதல் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இத்துடன் ரூ.1500 மதிப்புள்ள பாடங்களும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் அப்னா என்ற தளத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.

தற்போது ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படவுள்ளது.   

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile