Vodafone Idea ஜியோவுடன் போட்டியிடும் விதமாக அசத்தலான இந்த திட்டத்தில் 25GB டேட்டா கிடைக்கும்.

HIGHLIGHTS

(Vi) ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Vi இன் இந்த திட்டத்தின் விலை ரூ .267 மற்றும் அதற்கு 25 ஜிபி டேட்டா கிடைக்கும்.

புதிய ப்ரீபெய்டு திட்டத்தின் வேலிடிட்டி தன்மை 30 நாட்கள் ஆகும்

Vodafone Idea ஜியோவுடன் போட்டியிடும் விதமாக அசத்தலான இந்த திட்டத்தில் 25GB  டேட்டா கிடைக்கும்.

வோடபோன் ஐடியா (Vi) ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட புதிய ப்ரீபெய்டு  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Vi இன் இந்த திட்டத்தின் விலை ரூ .267 மற்றும் அதற்கு 25 ஜிபி டேட்டா கிடைக்கும். Vi இன் இந்த புதிய ப்ரீபெய்டு   திட்டத்தின் வேலிடிட்டி தன்மை 30 நாட்கள் ஆகும். வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட்  காலிங் வசதியும் கிடைக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வி நிறுவனம் சமீபத்தில் ரூ. 447 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் 50 ஜிபி டேட்டா எவ்வித தினசரி கட்டுப்பாடுகள் இன்றி வழங்கப்பட்டது. முன்னதாக இதேபோன்ற சலுகையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் அறிவித்து இருந்தன.

தற்போது ரூ. 267 விலையில் புது பிரீபெயிட் சலுகையை வி அறிவித்து இருக்கிறது. இதில் 30 நாட்களுக்கு 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி வி மூவிஸ், டிவி கிளாசிக் போன்ற சேவைகளுக்கான சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. புது பிரீபெயிட் சலுகை வி வலைதளத்தில் பட்டியலிபட்டப்பட்டு இருக்கிறது. 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 247 பிரீபெயிட் சலுகையிலும் 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 299 சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், 30 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile