வாய்ஸ் கால் சேவையில் அதிக தரமாக வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன் ஐடியா 2020 டிசம்பர் மாதத்திலும் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த தகவலினை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு உள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
டிராய் வலைதளத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து விதமாக நெட்வொர்க்குகளில் பயனர் வழங்கிய விவரங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்படுகிறது. மேலும் டிராயின் `மைகால்' டேஷ்போர்டில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
தரமான கால் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஐடியா 5-க்கு 4.9 புள்ளிகள், வோடபோன் 5-க்கு 4.3 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ 5-க்கு 3.9 புள்ளிகள் பெற்று இருக்கின்றன. ஏர்டெல் நிறுவனம் 5-க்கு 3.1 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 86.84 சதவீத பயனர்கள் திருப்திகரமான சேவையை பெற்றதாகவும், 8.39 சதவீதம் பேர் மோசமான சேவையை பெற்றதாகவும், 4.77 சதவீதம் பேர் கால் டிராப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில் 2020 டிசம்பர் மாதத்திலும் வோடபோன் ஐடியா இணைந்து ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி அதிக தரமுள்ள வாய்ஸ் கால் சேவையை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறது.-
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile