ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம்

ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம்  வசூலிக்க மாட்டோம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோஃபைபர் சேவைகள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோஃபைபர் சேவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. ஜியோஃபைபர் சேவையுடன் அதற்கான கட்டண விவரங்களையும் ரிலையன்ஸ் அறிவித்தது.

சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும் முன்பே ஜியோஃபைபர் சேவைக்கான சோதனை துவங்கி நடைபெற்று வந்தது.இத்துடன் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரிலையன்ஸ் ஜியோஃபைபர் அறிமுக சலுகை வழங்கப்பட்டது. 

ஜியோஃபைபர் கட்டண விவரம்

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க இயலாது என கூறப்படுகிறது. தற்சமயம் ஜியோ தனது ஜியோஃபைபர் சேவைக்கான கட்டண முறைகளை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

ஜியோஃபைபர் சலுகைகள் ரூ. 699 எனும் மாத கட்டணத்தில் துவங்கி அதிகபட்சமாக மாதம் ரூ. 8,499 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இணைய வேகம் 100Mbps இல் துவங்கி 1 Gbps வரை கிடைக்கிறது. இத்துடன் ஒவ்வொரு சலுகையிலும் தனிப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான பணிகள் முழுமை பெற இன்னும் சிலகாலம் ஆகும் என்பதோடு, இதுபற்றி ஜியோ தனது விற்பனை மற்றும் விளளம்பர பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன்பின்னரே ஹோம் பிராட்பேண்ட் சேவையை சரியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo