ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது ரூ.399 சலுகையில் ரூ.100 டிஸ்கவுண்ட்..!

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக சமீபத்தில் 16 ஜிபி டேட்டாவை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்கியது.

ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக சமீபத்தில் 16 ஜிபி டேட்டாவை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்கியது. 

கொண்டாட்டத்தின் நீட்சியாக ஜியோவின் அதிகம் விற்பனையாகும் சலுகையை ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.100 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு ரூ.399 பிரீபெயிட் சலுகையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 இன்ஸ்டன்ட் டிஸ்கவன்ட் மற்றும் போன்பெ மூலம் பணம் செலுத்தும் போது ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ரூ.399 பிரீபெயிட் சலுகையை பயனர்கள் மாதம் ரூ.100 என்ற கட்டணத்தில் பெற முடியும். ஜியோவின் ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு மாதம் 42 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ஜியோ சலுகையை பெறுவது எப்படி?

– முதலில் மைஜியோ செயலியில் லாக்-இன் செய்து ரீசார்ஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
– அடுத்து பை (Buy) பட்டனை க்ளிக் செய்து பேமென்ட் பக்கத்திற்கு செல்ல வேண்டும்
– பேமென்ட் ஆப்ஷனில் போன்பெ சேவையை தேர்வு செய்ய வேண்டும்
– போன்பெ கணக்கில் சைன்-இன் செய்து உங்களது மொபைல் நம்பரை ஓ.டி.பி. மூலம் உறுதி செய்ய வேண்டும்
– போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்தி ரூ.50 கேஷ்பேக் பெற முடியும்

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகை செப்டம்பர் 12-ம் தேதி துவங்கி செப்டம்பர் 21-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :