ரிலையன்ஸ் ஜியோ IPL 2018 சலுகைகள் அறிவிப்பு

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் IPL 2018 கிரிகெட் தொடரை முன்னிட்டு பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ IPL 2018 சலுகைகள் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ கிரிகெட் பிளே, ஜியோ கிரிகெட் சீசன் பேக் மற்றும் ஜியோ தண் தணா தண் நேரலை காமெடி நிகழ்ச்சி உள்ளிட்ட புதிய சேவைகளை அறிவித்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஐபிஎல் 2018 கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகைகளில் பயனர்கள் சலுகைகளுடன் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜியோ கிரிகெட் பிளே திட்டத்தில் கலந்து கொண்டு பயனர்கள் பரிசுகளை வெல்ல முடியும். 

ஜியோ கிரிகெட் சீசன் பேக் திட்டத்தில் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளின் நேரலையை காண முடியும். ஜியோ தண் தணா தண் நேரலை காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். ஜியோ அறிவித்திருக்கும் புதிய சலுகைகள் மை ஜியோ செயலியில் பெற முடியும். இவை ஜியோ அல்லாமல் மற்ற நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஜியோ கிரிகெட் சீசன் திட்டத்தில் பயனர்கள் 51 நாட்களும் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை மைஜியோ செயலி மூலம் பார்க்க முடியும். 102 ஜிபி டேட்டா வழங்கப்படும் இந்த சலுகையை பெற பயனர்கள் ரூ.251 செலுத்த வேண்டும். ஜியோ கிரிகெட் பிளே அலாங் கேம் மைஜியோ செயலியில் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளின் போது நடைபெறும்.

ஏழு வாரங்கள், 60 போட்டிகளின் போது நடைபெறும் போட்டியை வாடிக்கையாளர்கள் 11 இந்திய மொழிகளில் விளையாட முடியும். போட்டியில் வெல்பவர்கள் மும்பையில் ஒரு வீடு, 25 கார்கள், ரொக்க தொகை மற்றும் பல்வேறு பரிசுகளை வென்றிட முடியும்.

ஜியோ தண் தணா தண் நேரலை ஏப்ரல் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு துவங்கும். ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வெளியாகும் நேரலை தொடர்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு தொடரிலும் பிரபல விளையாட்டு வீரர்கள் தொகுத்து வழங்குவர். இத்துடன் கிரிகெட் பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுவர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo