ஜியோவின் டிஜிட்டல் பேக் எக்ஸ்ட்ரா 2 ஜிபி கூடுதலாக வழங்குகிறது…!

HIGHLIGHTS

ஆகஸ்டு 6-ம் தேதி வரை வழங்கப்படும் இந்த சலுகையில் கூடுதல் டேட்டா, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அன்லிமிட்டெட் காலிங் மற்றும் SMS சலுகைகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது

ஜியோ நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை செலக்ட் செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

ஆகஸ்டு 6-ம் தேதி வரை வழங்கப்படும் இந்த சலுகையில் கூடுதல் டேட்டா, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அன்லிமிட்டெட் காலிங் மற்றும் SMS சலுகைகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ டிஜிட்டல் சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது, மேலும் இவர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் சலுகையை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.

மைஜியோ ஆப்யில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களின் படி சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, மேலும் இதற்கான வேலிடிட்டி ஆகஸ்டு 6 வரை மட்டுமே. 

கூடுதல் டேட்டா அனைத்து வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்ற விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை, எனினும் இதுகுறித்து வெளியாகியிருக்கும் புகைப்படங்களின் படி ரூ.399 ரீசார்ஜ் சலுகையில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர சலுகையில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் மான்சூன் ஹங்காமா சலுகையை அறிவித்தது. இதில் பயனர்கள் தங்களது பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்து புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகையும் முழுமையாக திரும்ப பெறமுடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :