போன்பெ உடன் கூட்டு சேர்ந்து ஏர்டெல் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.75 கேஷ்பேக் வழங்குகிறது…!

HIGHLIGHTS

போன்பெ ஆப் மூலம் ரூ.199 பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் போன்பெ ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

அதன்படி போன்பெ ஆப் மூலம் ரூ.199 பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைஏர்டெல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்து, போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்துவோருக்கும் கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் ரூ.199 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (லோக்கல் மற்றும் STD ), இலவச ரோமிங் மற்றும் தினமும் 100 SMS . உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ.199 சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இந்த சலுகையின் கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மாதம் ரூ.25 கேஷ்பேக் ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் தொகை போன்பெ வாலெட் / கிஃப்ட் வவுச்சர் பேலென்ஸ் / போன்பெ அக்கவுன்ட் மூலம் பெற முடியும். 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :