Jio உடன் இணைந்த Disney+ Hotstar இப்பொழுது JioHotstar நீயும் நானும் வேறு இல்லை கெத்து
சமிபத்தில் Viacom18 மற்றும் ஸ்டார் இந்தியாவுடன் இனைந்து Jiostar என அறிவித்தது,
பிப்ரவரி 14 ஆன இன்று இப்பொழுது jiocinema மற்றும் Disney+ Hotstar உடன் கைகோர்த்து JioHotstar ஆக மாறியுள்ளது
இது மிக பெரிய ஸ்ட்ரீமிங் பிளாட்பாரம் உடன் 50கோடி பயனர்கள் இருக்கும் ஒன்றாக மாறியுள்ளது
சமிபத்தில் Viacom18 மற்றும் ஸ்டார் இந்தியாவுடன் இனைந்து Jiostar என அறிவித்தது, அதனை தொடர்ந்து பிப்ரவரி 14 ஆன இன்று இப்பொழுது jiocinema மற்றும் Disney+ Hotstar உடன் கைகோர்த்து JioHotstar ஆக மாறியுள்ளது, இந்த இணைப்புடன் இதில் 3 லட்ச மணி நேரம் ஸ்ட்ரீமிங் கன்டென்ட் மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் கவரேஜ் பெறலாம், இதில் நீங்கள் ப்லோக்பஸ்ட்டர் படங்கள்,பாப்புலர் டிவி ஷோ போன்றவற்றை பார்த்து மகிழலாம் மேலும் இப்பொழுது இது மிக பெரிய ஸ்ட்ரீமிங் பிளாட்பாரம் உடன் 50கோடி பயனர்கள் இருக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
JioStar இப்பொழுது JioHotStar மாற்றம்
இன்று காலை, மொபைலில் ஏற்கனவே டவுன்லோட் செய்யப்பட்ட ஹாட்ஸ்டார், ப்ளே ஸ்டோரிலிருந்து புதுப்பிக்கப்பட்டபோது, அதன் பெயரும் லோகோவும் மாறி வருவதைக் கண்டோம். அப்டேட் செய்த பிறகு, போனில் ஹாட்ஸ்டாரின் பெயர் ஜியோஸ்டார் என மாற்றப்பட்டது.
ஜியோஹாட்ஸ்டார் ஆப்யில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, ஆப்யில் கிடைக்கும் அனைத்து திட்டங்களும் தளத்தில் கிடைக்கும் அனைத்து கண்டேன்ட்களுக்கு அக்சஸ் வழங்கும். அதே நேரத்தில், கிரிக்கெட், டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம், பிரீமியர் லீக் மற்றும் பிற முக்கிய போட்டிகள் போன்ற அன்லிமிடெட் லைவ் ஸ்போர்ட்ஸ் இதில் அடங்கும். கூடுதலாக, பயனர்கள் புதிய இந்திய திரைப்படங்கள், ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டார் சீரியல்களின் டிஜிட்டல் பிரீமியர்களை தங்கள் டிவி ஒளிபரப்பிற்கு முன் பார்க்கலாம். கூடுதலாக, டிஸ்னி+ ஒரிஜினல்ஸ், பிரபலமான டிஸ்னி திரைப்படங்கள் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகளும் கிடைக்கும், இவற்றை நீங்கள் ஆங்கிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் பார்க்கலாம்.
JioHotstar திட்டங்கள்.
ஏற்கனவே உள்ள சப்ஸ்க்ரைபர்கள் அதன் ஏற்கனவே க்ரிடேன்சியல் உடன் லோகின் செய்யலாம், ஆனால் இதில் கூடுதலாக புதிய சப்ஸ்க்ரைபர் இதில் மொபைல் சூப்பர் மற்றும் ப்ரீமியம் திட்டங்களை தேர்ந்டுக்கலம்.
- மொபைல் திட்டம்: 3 மாதங்களுக்கு ரூ.149, வருடத்திற்கு ரூ.499 (விளம்பர ஆதரவு, 1 மொபைல் சாதனத்தில் HD ஸ்ட்ரீமிங்).
- சூப்பர் திட்டம்: 3 மாதங்களுக்கு ரூ.299 அல்லது ஒரு வருடத்திற்கு ரூ.899 (விளம்பர ஆதரவு, 2 சாதனங்களில் FHD ஸ்ட்ரீமிங்).
- பிரீமியம் திட்டம்: மாதத்திற்கு ரூ.299 (இன்டர்நெட் பேக் மட்டும்), மூன்று மாதங்களுக்கு ரூ.499, அல்லது வருடத்திற்கு ரூ.1,499 (லைவ் கன்டென்ட் மற்றும் நான்கு டிவைசில் 4K ஸ்ட்ரீமிங் ad-free கன்டென்ட் பார்க்கலாம்).
கன்டென்ட் லைப்ரரி
இந்த ப்லாட்பர்மின் கீழ் டிவி நிகழ்ச்சிகள், பிளாக்பஸ்டர் படங்கள், ரியாலிட்டி பொழுதுபோக்கு, அனிம் மற்றும் 10 மொழிகளில் சர்வதேச பிரீமியர்களின் பரந்த நூலகத்தைக் கொண்டுள்ளது. “ஜியோஹாட்ஸ்டார் ஹாலிவுட்டின் சிறந்ததை வழங்கும், டிஸ்னி, என்பிசி யுனிவர்சல் பீகாக், வார்னர் பிரதர்ஸ். டிஸ்கவரி எச்பிஓ மற்றும் பாரமவுண்ட் – அனைத்தும் ஒரே தளத்தில்; உலகளவில் வேறு எந்த ஸ்ட்ரீமிங் சேவையும் வழங்காத ஒன்று என்று நிறுவனத்தின் அறிக்கை மேலும் கூறியது.
இதையும் படிங்க VI யின் 5G அறிமுக தேதி உருதி செய்தது எப்பொழுது எங்கே பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile