BSNL 99 கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது ப்ராண்ட்பேண்ட் ரிச்சார்ஜ் திட்டம்

HIGHLIGHTS

இந்த ரிச்சார்ஜ் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்குகிறது 45GB டேட்டா

இப்பொழுது சில நாட்களே இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ  மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பய்பர் தொடங்கும் நிலையில் இருக்கிறது அதனை தொடர்ந்து BSNL அதன் என்ட்ரி லேவலாக ப்ராண்ட்பேண்ட் ரீசார்ஜ் திட்டத்தை தொடங்கியுள்ளது இந்த ரிச்சார்ஜ்  திட்டத்தின் விலை  Rs 99லிருந்து ஆரம்பித்து Rs 399 வரை இருக்கிறது.

நான்கு புதிய சலுகைகளிலும் 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் வேகம் வழங்குகிறது.

ரூ.99 விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்ய முடியும். தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.-யாக குறைக்கப்படும்.

இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.

இதேபோன்று ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாக இருக்கிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது. ரூ.299 சலுகையில் தினமும் 10 ஜி.பி. டேட்டாவும், ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :