சரியான போட்டி ஒரே மாதுரியான திட்டத்துடன் Aitel மற்றும் Jio எது பெஸ்ட்டான நன்மை தருகிறது
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Jio மற்றும் Airtel இந்த இரு நிறுவங்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நடந்து வருகிறது. இப்பொழுது அதை நிருபிக்கும் வகையில் ஒரே மாதுரியான விலையில் ரூ,449 யில் போஸ்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் எது உண்மையிலே மிக சிறந்த நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க
SurveyJio ரூ. 449 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ. 449 திட்டம் குறிப்பாக பேமிலி கஸ்டமர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரே ஒரு நம்பரில் ரீச்சர்சஜ் செய்வதன் மூலம் கூடுதலாக மூன்று சிம்களைச் சேர்க்கலாம். இருப்பினும், ஒவ்வொரு கூடுதல் சிம்மிற்கும் மாதத்திற்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும். முதன்மைப் கஸ்டமருக்கு 75GB அதிவேக டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS கிடைக்கும். டேட்டா தீர்ந்த பிறகு, ஒவ்வொரு GB-க்கும் ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக வரும் ஒவ்வொரு மெம்பருக்கும 5GB டேட்டா வழங்கப்படும்.
இது தவிர, இந்தத் திட்டத்துடன் ஜியோ பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது, அவற்றுள் அடங்குபவை-
- 5G பயனர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டா
- 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா
- ஜியோ டிவி அணுகல்
- 50GB ஜியோஏஐ கிளவுட் ஸ்டோரேஜ்
- 5000GB கூகிள் ஒன் ஸ்டோரேஜ்
- 18 மாத ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா
Airtel ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டம்
Airtel ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் டிஜிட்டல் சேவைகளை அதிகம் சார்ந்திருக்கும் கஸ்டமர்களுக்கு , ஏர்டெல்லின் ரூ. 449 போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஏர்டெல்லின் இந்தத் திட்டம், பின்வரும் பல நன்மைகளையும் வழங்குகிறது:
- அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்
- 30 நாட்களுக்கு அன்லிமிடெட் 4G/5G டேட்டா
- தினசரி 100 SMS
- 100GB கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ்
- 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா
- 1 ஆண்டு அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம்
- இலவச ஹலோடியூன், இலவச ஸ்பேம் Alert
- ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்திற்கான அக்சஸ்
இதையும் படிங்க Jio உடன் Airtel மோதலா போட்டிக்கு அறிமுகம் செய்த ஒரே மாதுரியான இந்த திட்டத்தில் எது மாஸ்
எந்தத் திட்டம் அதிகப் பயனளிக்கும்?
உங்களுக்கு குடும்ப இணைப்புகள், AI அம்சங்கள் மற்றும் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், ஜியோவின் ரூ. 449 போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், வரம்பற்ற டேட்டா, கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கு சேவைகளே உங்கள் முன்னுரிமையாக இருந்தால், ஏர்டெல்லின் ரூ. 449 போஸ்ட்பெய்ட் திட்டம் அதிக மதிப்பை வழங்கக்கூடும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile