சத்தமில்லாமல் Jio இந்த இரு திட்டத்தில் Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் நீக்கியுள்ளது
Jio சத்தமில்லாமல் Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தை இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது.
புதிதாக இணையும் கஸ்டமர்களுக்கு இந்தச் சலுகை இனி கிடைக்காது.
புதிய பயனர்களுக்கு இது நிச்சயமாக ஒரு இழப்பாகவே அமையும்.
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio சத்தமில்லாமல் Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தை அதன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. ஏற்கனவே இந்தச் சலுகையைப் பெற்ற பயனர்களுக்கு, டெலிகாம் நிறுவனம் அதை நீக்கவில்லை. ஆனால், புதிதாக இணையும் கஸ்டமர்களுக்கு இந்தச் சலுகை இனி கிடைக்காது.
ஜியோ (Jio) தனது ப்ரீபெய்ட் திட்டங்களைப் பயன்படுத்தும் கஸ்டமர்களுக்காக 'கூகுள் ஏஐ ப்ரோ' (Google AI Pro) எனும் சலுகையை அறிமுகப்படுத்தியிருந்தது; இதற்காகப் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. சுமார் 35,100 ரூபாய் மதிப்புள்ள இந்தச் சலுகையை, 18 மாத காலத்திற்கு ஜியோ வழங்கியது. தற்போது இந்தச் சலுகை நிறுத்தப்பட்டுள்ளதால், புதிய பயனர்களுக்கு இது நிச்சயமாக ஒரு இழப்பாகவே அமையும்.
Jio ரூ,399 திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் Canva சப்ஸ்க்ரிப்ஷன் அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்தது. கஸ்டமர்களுக்கு கேன்வா ப்ரோ மற்றும் கேன்வா ப்ரோ லைட் ஆகிய இரண்டு பலன்களும் கிடைக்கின்றன. கேன்வா ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன், ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்துடன் கிடைக்கும். கேன்வா ப்ரோ பலனின் மதிப்பு ரூ.4,000 ஆகும். ரூ.399 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5ஜிபி டேட்டா மற்றும் ஒரு தினமும் 100 SMS ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்துடன் ஜியோகேம்ஸ் மொபைல் , ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் மற்றும் ஃபேன்கோட் (ஜியோடிவி வழியாக) உள்ளிட்ட கூடுதல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகின்றன. மேலும், இந்தத் திட்டத்துடன் 50ஜிபி ஜியோஏஐகிளவுட் பலனும் உள்ளது.
Jio ரூ. 349 திட்டம்
ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் வேறு எந்த ப்ரீபெய்ட் திட்டத்துடனும் கேன்வா ப்ரோ கிடைக்காது. இருப்பினும், கேன்வா ப்ரோ லைட் பல திட்டங்களுடன் கிடைக்கிறது. கேன்வா ப்ரோ லைட்டின் விலை ரூ. 1,590 ஆகும். ரூ. 349 திட்டம் அல்லது தினசரி 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டா கொண்ட ஏதேனும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் ஜியோ கஸ்டமர்களுக்கு , 12 மாத Canva pro Lite சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த நன்மையைப் பெற, நீங்கள் MyJio ஆப்க்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட போன் நம்பரில் ஜியோவிலிருந்து ஒரு முறை மட்டுமே இந்த நன்மையைப் பெற முடியும். டெலிகாம் நிறுவனம் தொடர்ந்து சலுகைகளைச் சேர்த்தும் நீக்கியும் வருகிறது. எனவே, நீங்கள் இந்த நன்மையைப் பெற விரும்பினால், அதை வேகமாக செய்யவும்.