Snapchat பிரியர்களுக்காக Jio அறிமுகம் செய்த இரண்டு சூப்பர் திட்டம் இதில் இருக்கும் நன்மை என்ன பாருங்க
Reliance Jio அதன் Snapchat பிரியர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த புதிய திட்டத்தின் விலை ரூ,111 மற்றும் ரூ,459 யில் வருகிறது
, இந்த இரண்டு திட்டங்களின் அம்சங்களும் நன்மைகளும் முற்றிலும் வேறுபட்டவை
Reliance Jio அதன் Snapchat பிரியர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் இதில் Snapchat+ (Snapchat Plus) சப்ஸ்க்ரிப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ,111 மற்றும் ரூ,459 யில் வருகிறது, இருப்பினும், இந்த இரண்டு திட்டங்களின் அம்சங்களும் நன்மைகளும் முற்றிலும் வேறுபட்டவை. ₹111 திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும்,மேலும் இந்த இரு திட்டங்களில் வரும் மற்ற நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ.111 திட்டம்
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ.111 யில் வருகிறது இதில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ஒரு டேட்டா ஆட்-ஆன் வவுச்சர் ஆகும். பயனர்களுக்கு 5GB டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் இரண்டு OTT விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்: ஜியோகேம்ஸ் மொபைல் (56 நாட்களுக்கு) மற்றும் ஜியோகேம்ஸ் மொபைல் + ஃபேன் கோட் + ஸ்னாப்சாட்+. கஸ்டமர்கள் MyJio ஆப் மூலம் இந்தச் சப்ஸ்க்ரிப்ஷன் செயல்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க ஓரம்போ ஜியோ, Airtel கம்மி விலையில் கெத்து அதிக வேலிடிட்டி,டேட்டா OTT அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை
ஜியோவின் ரூ. 459 திட்டம்
நிறுவனத்தின் ₹459 திட்டம் ஒரு முழுமையான சேவைத் திட்டமாகும். இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு தினமும் 100 SMS, மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா + 5ஜிபி போனஸ் டேட்டா உள்ளிட்ட பல சிறந்த பலன்களை வழங்குகிறது.
இது தவிர, இந்தத் திட்டத்தில் பல கூடுதல் பலன்களும் கிடைக்கும். அவையாவன:
- ஜியோகேம்ஸ் மொபைல்
- Snapchat+ சப்ஸ்க்ரிப்ஷன்
- ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (3 மாதங்கள்)
- JioAICloud உடன் 50GB இலவச சேமிப்பகம்
- அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தில் ₹35,100 விலையுள்ள ஜெமினி AI ப்ரோவுக்கான 18 மாத சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். மேலும், இதில் 5000GB கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் பிற அம்சங்களும் அடங்கியுள்ளன.
Snapchat+ சப்ஸ்க்ரிப்ஷன் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
ஸ்னாப்சாட்+ (Snapchat Plus) என்பது ஸ்னாப்சாட்டின் ஒரு பிரீமியம் சந்தாவாகும். இது, இலவசப் பதிப்பில் இல்லாத கூடுதல் மற்றும் மேம்பட்ட அம்சங்களை பயனர்களுக்கு வழங்குகிறது.
- பயனர்கள் தங்கள் நண்பரை நிரந்தரமாக முதலிடத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.
- உங்கள் நண்பர்களின் இருப்பிட வரலாற்றை (கடந்த 24 மணிநேரம்) நீங்கள் பார்க்கலாம்.
- உங்கள் ஸ்டோரி யார் மறுபரிசீலனை செய்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டறியலாம்.
- நீங்கள் ஸ்னாப்சாட் ஆப்யின் ஐகானை மாற்றலாம்.
- அரட்டையின் பின்னணியை நீங்கள் விரும்பியபடி மாற்றியமைக்கலாம்.
- நீங்கள் வெவ்வேறு அறிவிப்பு ஒலிகளை அமைக்கலாம்.
- உருவாக்குநர்கள் உங்கள் பதில்களை இன்னும் எளிதாகக் காண முடியும்.
- கதையை நீண்ட காலத்திற்கு காண்பிக்கலாம்.
- சுயவிவரத்தில் Snapchat+ சின்னம் தோன்றும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile