யூத் மற்றும் கேமிங் பிரியர்களை கவரும் வகையில் Jio அறிமுகம் செய்த புதிய திட்டம்

HIGHLIGHTS

Reliance Jio வாலிப கச்டமர்களுகாக "Youth மற்றும் Gaming Plan" அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ. 459, இது MyJio ஆப் மற்றும் இணையம் வழியாகக் கிடைக்கிறது

இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் வேலிடிட்டி ஆகும்

Reliance Jio வாலிப கச்டமர்களுகாக “Youth மற்றும் Gaming Plan” அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ. 459, இது MyJio ஆப் மற்றும் இணையம் வழியாகக் கிடைக்கிறது. இந்த பேக், அதிவேக டேட்டா பலன்களை பிரீமியம் சோசியல் மீடியா மற்றும் கேமிங் சப்ஸ்க்ரிப்ஷன்களுடன் இணைத்து, ஒரு விரிவான டிஜிட்டல் வாழ்க்கைமுறைத் பேக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jio ரூ,459 Youth மற்றும் கேமிங் திட்டம்

ஜியோவின் இந்த புதிய ஜியோ திட்டத்தின் விலை ரூ,459 ஆகும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் வேலிடிட்டி உங்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும், கூடுதலாக 5GB அதிவேக டேட்டாவும் சேர்த்து மொத்தம் 61GB டேட்டா கிடைக்கும். டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 64Kbps ஆகக் குறைந்துவிடும். மேலும், உங்களுக்கு அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS கிடைக்கும். உங்கள் பகுதியில் ஜியோ ட்ரூ 5G கிடைத்தால், உங்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவையும் அனுபவிக்கலாம்.

இந்த திட்டத்தின் நன்மைகள்

ஜியோ இந்தத் திட்டத்தை வெறும் டேட்டாவுடன் மட்டும் மட்டுப்படுத்தவில்லை. இந்த ரீசார்ஜ் ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் கேமிங் தொகுப்பை வழங்குகிறது. இதில் ஜியோகேம்ஸ் மொபைல், ஜியோடிவி வழியாக ஃபேன் கோட் மற்றும் ஸ்னாப்சாட்+ ஆகியவற்றுக்கான அணுகல் அடங்கும். மேலும், இதில் 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோஏஐகிளவுடில் 50ஜிபி சேமிப்பகமும் அடங்கும்.

இதையும் படிங்க மாப்பு வச்சிடாய ஆப்பு, ஜியோக்கே டஃப் கொடுத்து டாப்பில் இருக்கும் Airtel, டெப்பாசிட் இழந்து தவிக்கும்  BSNL மற்றும் VI

இந்தத் திட்டத்தில், ரூ,35,100 மதிப்புள்ள சேவையான கூகுள் ஜெமினி ப்ரோ, 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இது 5TB கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் மேம்பட்ட AI அம்சங்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. இந்தப் பலன்களைப் பெற, சலுகைக் காலம் முழுவதும் நீங்கள் ஒரு செல்லுபடியாகும் ஜியோ திட்டத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஜியோவின் ரூ,459 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிது. நீங்கள் MyJio ஆப்பை திறந்து, ப்ரீபெய்ட் திட்டங்கள் பிரிவிலிருந்து அதைத் தேர்ந்தெடுக்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :