ஜியோபோன பயனர்களுக்கு அதிரடி புதிய சலுகை ரூ. 49 மற்றும் ரூ. 69 ரூபாயில்.

HIGHLIGHTS

ரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும்.

ஜியோபோன  பயனர்களுக்கு அதிரடி  புதிய சலுகை ரூ. 49 மற்றும் ரூ. 69 ரூபாயில்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரூ. 49 விலை சலுகை புதிய சலுகை இல்லை. இந்த சலுகையினை கடந்த டிசம்பர் மாதம் கட்டண உயர்வின் போது ரிலையன்ஸ் ஜியோ தனது வலைதளத்தில் இருந்து நீக்கியது. அந்த வகையில் தற்சமயம் பழைய சலுகை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ. 49 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 2 ஜி.பி.டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்பட்டு விடும். இதுதவிர 25 எஸ்.எம்.எஸ்., ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஜியோ ரூ. 2121 சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது. 

ரூ. 69 ஜியோபோன் சலுகையிலும் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 25 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.

இதில் லேண்ட்லைன் வாய்ஸ் காலிங் சலுகையையும் வழங்குகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile