இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக இருக்கிறது. இந்த தகவலை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது வருவாய் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
மேலும் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து பெற்ற வருவாய் ரூ. 145 ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 3.2 சதவீதம் வரை அதிகம் ஆகும்.
இந்நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் புதிதாக 73 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து உள்ளது. முந்தைய காலாண்டில் ஜியோ நிறுவனம் புதிதாக 99 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருந்தது.
புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஜியோ வருடாந்திர அளவில் 13.96 வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.59 கோடிகளாக இருந்தது.