HIGHLIGHTS
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக இருக்கிறது
இது முந்தைய காலாண்டை விட 3.2 சதவீதம் வரை அதிகம் ஆகும்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக இருக்கிறது. இந்த தகவலை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது வருவாய் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
மேலும் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து பெற்ற வருவாய் ரூ. 145 ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 3.2 சதவீதம் வரை அதிகம் ஆகும்.
Surveyஇந்நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் புதிதாக 73 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து உள்ளது. முந்தைய காலாண்டில் ஜியோ நிறுவனம் புதிதாக 99 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருந்தது.
புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஜியோ வருடாந்திர அளவில் 13.96 வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.59 கோடிகளாக இருந்தது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile