JIO அதன் சில திட்டங்களைஅதிரடியாக மாற்றியுள்ளது

JIO  அதன் சில திட்டங்களைஅதிரடியாக  மாற்றியுள்ளது
HIGHLIGHTS

Jio நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை அதிரடியாக மாற்றி உள்ளது

ஜியோ ரூ. 501 ஐஎஸ்டி வவுச்சர், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 ஐஆர் சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை அதிரடியாக மாற்றி உள்ளது. அதன்படி ஜியோ ஐஎஸ்டி காலிங் மற்றும் சர்வதேச ரோமிங் பிரீபெயிட் சலுகைகளின் பலன்கள் குறைக்கப்பட்டு உள்ளது. 

ஜியோவின் RS 1201 மற்றும் 1101 IR PACKS 

ஜியோ ரூ. 501 ஐஎஸ்டி வவுச்சர், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 ஐஆர் சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய நடவடிக்கை குறித்து ரிலையன்ஸ் ஜியோ சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த மாற்றங்கள் ஜியோ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 575, ரூ. 2875 மற்றும் ரூ. 5751 அன்லிமிட்டெட் ஐஆர் சலுகை பலன்களில் மட்டும் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஜியோவின் ரூ. 501 ஐஎஸ்டி சலுகையில் 28 நாட்களுக்கு 424.58 ரூபாய் டாக்டைம் வழங்கப்படுகிறது. இது முன்பை விட ரூ. 126.42 குறைவு ஆகும்.

ரூ. 1101 சலுகையில் ரூ. 933.05 டாக்டைம் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் ரூ. 1211 டாக்டைம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோன்று ரூ. 1201 சலுகையில் முந்தைய ரூ. 1321 டாக்டைமிற்கு மாற்றாக தற்சமயம் ரூ. 1017 டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஜியோ சார்பில் இதுவரை சலுகை மாற்றம் பற்றி எவ்வித தவலும் வழங்கப்படவில்லை. இதனால் இவை எப்போது மாற்றப்பட்டன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo