Jio அம்பனியின் வேற லெவல் ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் ஒரு வருஷம் முழுதும் ஜாலி தான்
Reliance Jio அதன் ப்ரீபெய்ட் போர்ட்போலியோ திட்டத்தின் கீழ் நீண்ட நாள் வேலிடிட்டி வழங்குகிறது, இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள், கஸ்டமர்களுக்கு ஒரு வருடம் வரையிலான வேலிடிட்டி காலம், டேட்டா மற்றும் என்டர்டைன்மென்ட் நன்மைகள் உள்ளிட்ட பலன்களை மொத்த விலையில் வழங்குகின்றன. 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் இந்தத் திட்டத்தில், அன்லிமிடெட் 5ஜி அதிவேக இன்டர்நெட் அக்சஸ் வழங்குகின்றன. மேலும், அவை ஏராளமான இலவசப் பலன்களையும் அளிக்கின்றன. ஜியோவின் 365 நாள் வேலிடிட்டி வரும் இந்த திட்டத்தில் வேறு என்னவெல்லாம் நன்மைகள் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,3599 திட்டத்தின் நன்மை.
ஜியோ, 365 நாட்கள் வேலிடிட்டி ரூ.3599 என்ற தொடக்கத் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நிறுவனம் மொத்தம் 912.5GB டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் SMS நன்மைகளும் இதில் அடங்கும். அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் கனெக்ஷன் செயலில் இருக்கும், ஆனால் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 100 இலவச SMS நன்மையை வழங்குகிறது.
இதையும் படிங்க மச்சி நீ பெரிய ஆளு தான், Airtel அன்லிமிடெட் 5G டேட்டா,காலிங் மற்றும் நன்மைகள்
இந்தத் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டாருக்கான 3 மாத மொபைல்/டிவி சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். உங்களுக்கு இலவச கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் கிடைக்கும். இந்தத் திட்டத்தில், கஸ்டமர்களுக்கு ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற ஆப்களுக்கான சப்ஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது. ஜியோடிவி மூலம், நீங்கள் 365 நாட்களும் செயலியில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். ஜியோ திட்டத்துடன் கிடைக்கும் ஜியோகிளவுட், உங்களுக்குக் கூடுதல் ஸ்டோரிஜிர்க்காண ஆப்ஷன் வழங்குகிறது. இதில், பயனருக்கு 50ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்தத் திட்டத்துடன், ரூ.35100 விலையுள்ள கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்திற்கான சப்ஸ்க்ரிப்ஷன் வருகிறது. ஆனால், அதற்கு உங்கள் சிம்மில் ரூ.349 திட்டம் அல்லது ஏதேனும் ஒரு வரம்பற்ற 5ஜி திட்டம் செயலில் இருக்க வேண்டும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile