ஏப்ரல் 30 வரை இந்த சேவைக்கு பணம் தர தேவை இல்லை BSNL யின் அதிரடி உத்தரவு

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Apr 2021
HIGHLIGHTS
  • ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஒரு பயனர் தேர்வுசெய்யும் எந்தவொரு Fixed-line கனெக்ஷனுக்கான இன்ஸ்ட்டாலேஷன் கட்டணத்தை செலுத்த தேவையில்லை

  • BSNL 2021 ஏப்ரல் 8 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை மூலம் இந்த தகவலை அறிவித்துள்ளது.

  • பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் லேண்ட்லைன் சேவை போன்ற பல சேவைகளை டெல்கோ வழங்குகிறது

ஏப்ரல் 30 வரை இந்த சேவைக்கு பணம் தர தேவை இல்லை BSNL யின் அதிரடி  உத்தரவு
ஏப்ரல் 30 வரை இந்த சேவைக்கு பணம் தர தேவை இல்லை BSNL யின் அதிரடி உத்தரவு

பிஎஸ்என்எல்  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஒரு பயனர் தேர்வுசெய்யும் எந்தவொரு Fixed-line கனெக்ஷனுக்கான இன்ஸ்ட்டாலேஷன் கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 2021 ஏப்ரல் 8 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை மூலம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இந்த சலுகை எந்தவொரு குறிப்பிட்ட வட்டத்திற்கும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதால் இது இந்தியா முழுவதும் அணுக கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகள், டிஎஸ்எல் பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் லேண்ட்லைன் சேவை போன்ற பல சேவைகளை டெல்கோ வழங்குகிறது. இப்படியான எந்தவொரு சேவைக்குமான புதிய இணைப்புக்கான இன்ஸ்டாலேசன் கட்டணங்கள் ஏப்ரல் 30, 2021 வரை தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ஆக இப்போதே தொடங்கி ஏப்ரல் 30, 2021 வரை, பிராட்பேண்ட் அல்லது லேண்ட்லைன் இணைப்பைத் தேடும் பிஎஸ்என்எல் பயனர்கள் எந்த நிறுவல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை.

டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்ற அனைத்து மாநிலங்களையும் வட்டத்தையும் இத சலுகை பற்றி வலைத்தளங்களில் அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதால், மேற்கண்ட சலுகை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது.

வழக்கமாக ஒரு புதிய பிஎஸ்என்எல் இணைப்பை இன்ஸ்டால் செய்வதற்க்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலுத்த வேண்டும்?

பிஎஸ்என்எல்-இன் இந்த புதிய சலுகையுடன் அதன் பயனர்கள் சரியாக எவ்வளவு பணத்தை சேமிக்கிறார்கள் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அது கணிசமான தொகையே ஆகும்.

பிராட்பேண்ட் ஒன்லி இணைப்புகளுக்கு, பிஎஸ்என்எல் பயனர்கள் நிறுவல் கட்டணமாக ரூ .250 செலுத்த வேண்டும். ஆனால் பாரத் ஃபைபர் இணைப்புகளுக்கு, பயனர்கள் நிறுவல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

ஏற்கனவே உள்ள வாய்ஸ் காலிங் சேவையுடன் பிராட்பேண்ட் இணைப்பை பெற ஒருவர் ரூ.250 என்கிற நிறுவல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

பி.எஸ்.என்.எல் பயனர்கள் நீண்ட காலத்திற்கு ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை வாங்க விரும்பினால், நிறுவல் கட்டணங்களை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்க. அதாவது நீண்ட கால திட்டங்களை தேர்வு செய்யவதன் மூலம் உங்களால் நிறுவல் கட்டணங்கள் பூஜ்ஜியமாக்க முடியும்.

JioFiber உடன் ஒப்பிடுகையில், இந்த செலவு ஒன்றுமே இல்லை. JioFiber பயனர்கள் திருப்பிச் செலுத்த முடியாத நிறுவல் கட்டணமாக ரூ.1,000 மற்றும் நிறுவனம் வழங்கிய ONU சாதனங்களுக்கான பாதுகாப்பு வைப்பு தொகையாக ரூ.1,500 செலுத்த வேண்டும். குறிப்பிடப்படும் பாதுகாப்பு வைப்பு முழுமையாக திருப்பித் தரப்படுகிறது.

ஆக மேற்குறிப்பிட்ட ஏப் 30 வரையிலான சலுகை ஒரு வரையறுக்கப்பட்ட சலுகையாக இருக்கும்போது, நீங்கள் ஒரு நீண்ட கால திட்டத்தைப் பெற நினைத்தால், நிறுவல் கட்டணத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Bsnl Users No Need To Pay Installation Charges On New Connections Until 30th April 202
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status