Jio-Airtel -Vi ஓரம்போ BSNL யின் குறைந்த விலையில் சூப்பர் தமக்கா பிளான்

HIGHLIGHTS

July 2024 Reliance Jio, Airtelமற்றும் Vi (Vodafone Idea) யின் பயனர்களுக்கு மோசமானதாக மாறலாம்

இந்த நிறுவனங்கள் ஜூலை 3 முதல் அதன் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது

BSNL யின் குறைந்த விலையில் பல ரீச்சார்ஜ் திட்டங்கள் இருக்கிறது

Jio-Airtel -Vi ஓரம்போ BSNL யின் குறைந்த விலையில் சூப்பர் தமக்கா பிளான்

July 2024 Reliance Jio, Airtelமற்றும் Vi (Vodafone Idea) யின் பயனர்களுக்கு மோசமானதாக மாறலாம் ஏன் என்றால் இந்த நிறுவனங்கள் ஜூலை 3 முதல் அதன் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது அதனை தொடர்ந்து பெரும்பாலான மக்களுக்கு அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் டெலிகாம் நிறுவனமான BSNL தான் இப்பொழுது கடவுள் போல் தெரிகிறது ஏன் என்றால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதன் ரீச்சார்ஜ் திட்டத்தின் விலையை 25% அதிகரித்துள்ளது இதன் மூலம் நடுத்தர மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளர்கள்,

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL தங்களின் 4G சேவையில் அப்டேட் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது தமிழ்நாட்டிலும் பெரும்பாலான இடங்களில் 4G சேவை கொண்டு வந்துள்ளது அந்த வகையில் தனியார் டெலிகாம் நிறுவனகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் BSNL யின் குறைந்த விலையில் பல ரீச்சார்ஜ் திட்டங்கள் இருக்கிறது அதில் பெஸ்ட் டாப் 5 ரீச்சார்ஜ் திட்டங்களை பார்க்கலாம்

BSNL யின் 107ரூபாய் கொண்ட திட்டம்

BSNL யின் இந்த திட்டத்தில், நீங்கள் 3GB 4G டேட்டாவுடன் 200 நிமிட கால்களை ரூ.107 விலையில் வழங்குகிறது இது தவிர, இந்த திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறைந்த விலையில் அதிக நன்மைகள் கொண்ட திட்டத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது. BSNL யின் இந்த திட்டம் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi இன் அனைத்து திட்டங்களுக்கும் கடுமையான போட்டியை அளிக்கிறது.

BSNL யின் 108 ரூபாய் கொண்ட திட்டம்

இது தவிர, நிறுவனம் ரூ.108 விலையில் ஒரு திட்டத்தையும் கொண்டுள்ளது. இது நிறுவனம் வழங்கிய FRC ரீசார்ஜ் திட்டமாகும், இது புதிய கஸ்டம்ர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், அன்லிமிடெட் காலிங் உடன் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் விதிமுறையும் உள்ளது.

BSNL யின் 197 ரூபாய் கொண்ட பிளான்

இந்த திட்டம் மிக சிறந்த திட்டம் என கூறலாம், BSNL யின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ரூ.197 விலையில் 70 நாட்கள் வேலிடிட்டியாகும் இதில் 2ஜிபி 4ஜி டேட்டா உங்களுக்கு வழங்கப்படுகிறது, இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 SMS நன்மையையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது, இருப்பினும், இந்த திட்டத்தின் முதல் 18 நாட்களுக்கு மட்டுமே இதைப் வழங்குகிறது இருப்பினும், நீண்ட காலத்திற்கு அன்லிமிடெட் காலிங் கொண்ட திட்டத்தை விரும்புவோருக்கு மற்றொரு திட்டம் சிறந்தது. எடுக்க வேண்டும் அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வெறும் 18 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது எனவே நீங்கள் திட்டத்தை BSNL யிலிருந்து 70 நாட்களுக்கு ரூ.199 விலையில் ரீசார்ஜ் செய்யலாம்.

BSNL யின் 397 ரூபாய் கொண்ட திட்டம்

BSNL யின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது தவிர, இந்த திட்டம் முதல் 30 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 2ஜிபி 4ஜி டேட்டாவின் பலனையும் வழங்குகிறது. இருப்பினும், நிறுவனம் ரூ.797 விலையில் ஒரு திட்டத்தையும் கொண்டுள்ளது, இது கஸ்டமர்களுக்கு 300 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில், அன்லிமிடெட் காலிங் தவிர, முதல் 60 நாட்களுக்கு 2ஜிபி 4ஜி டேட்டாவின் பலன் கிடைக்கும்.

BSNL யின் 1999ரூபாய் கொண்ட திட்டம்.

நிறுவனத்தின் இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் காலிங்குடன் 600ஜிபி 4ஜி டேட்டாவின் பலனையும் வழங்குகிறது முழு வேலிடிட்டியாகும் வரை இந்த நன்மையை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். இது தவிர, BSNL ட்யூன்ஸ் மற்றும் பிற மூன்றாம் தரப்பு ஆப்களின் சந்தாவையும் பெறலாம்

இதையும் படிங்க:BSNL யின் மற்ற நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்க ரூ,107 யில் 35 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo