BSNL ரூ.399 பிரீபெயிட் சலுகையில் 3.21 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

BSNL நிறுவனம் ரூ.399 விலை சலுகையை கடந்த ஆண்டு ராக்கி பண்டிகைக்கு அறிவித்தது. பிரீபெயிட் பயனர்களுக்கு 2.21 ஜி.பி. கூடுதல் டேட்டா ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

BSNL நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.399 சலுகை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 74 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்களுக்கு மொத்தம் 237.54 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

கூடுதல் டேட்டா தவிர ரூ.399  BSNL சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS  பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

BSNL  நிறுவன வலைதளங்களின் வெவ்வேறு வட்டாரங்களில் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3.21 ஜி.பி. வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1 ஜி.பி. டேட்டாவை விட 2.21 ஜி.பி. வரை அதிகம் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 3.21 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 KB.யாக குறைக்கப்படும்.

BSNL  நிறுவனம் ரூ.399 விலை சலுகையை கடந்த ஆண்டு ராக்கி பண்டிகைக்கு அறிவித்தது. பிரீபெயிட் பயனர்களுக்கு 2.21 ஜி.பி. கூடுதல் டேட்டா ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :