ஜியோவுக்கு போட்டியாக BSNL அதன் போஸ்ட்பெய்ட் திட்டத்தை மாற்றியுள்ளது…!

HIGHLIGHTS

BSNL நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு செலக்ட் செய்யப்பட்ட சலுகைகளில் இலவச SMS வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL  நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு செலக்ட் செய்யப்பட்ட சலுகைகளில் இலவச SMS வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போஸ்ட்பெயிட் சலுகைகளில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை.

BSNL   நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதிக விலையில் கிடைக்கும் சலுகைகளுக்கு தினமும் 100 SMS . இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் ரூ.399 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சலுகைகளில் குறிப்பிட்ட வேலிடிட்டிக்கு மொத்தம் 100 SMS  வழங்கப்படுகிறது.

புதிய அறிவிப்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது. BSNL  பிரீமியம் சலுகைகளிலும் தினமும் 100 SMS . வழங்கப்படாமல் இருந்தது.

BSNL  நிறுவன போஸ்ட்பெயிட் சேவைகள் தற்சமயம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அமலாகியிருக்கிறது. அந்த வகையில் இதேபோன்ற அறிவிப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஜூன் மாதத்தில் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளிலும் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகள் மற்றும் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளில் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :