BSNL அறிவித்துள்ளது ரூ.18யில் புத்தம் புதிய சலுகை…!

HIGHLIGHTS

BSNL நிறுவனத்தின் 18-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரூ.18 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

BSNL  அறிவித்துள்ளது ரூ.18யில்  புத்தம் புதிய சலுகை…!

BSNL   நிறுவனத்தின் 18-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரூ.18 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.18 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வீடியோ கால் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகை மட்டுமின்றி BSNL  பிரீமியம் ரீசார்ஜ் சலுகைகளில் 18% வரை கூடுதல் டாக்டைம் மற்றும் டேட்டா வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL  ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், 15 ஜி.பி. டேட்டா, ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம் மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த விலை சலுகைகளுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL  அறிவித்திருக்கும் ரூ.18 சலுகை ஜியோ வழங்கி வரும் ரூ.19 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.19 சலுகையில் 0.15 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 20 SMS உள்ளிட்டவை ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

இதுதவிர, BSNL  வழங்கும் மற்ற சலுகைகளில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், மற்றும் 15 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம், மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.601 சலுகையில் ரூ.709 டாக்டைம் மற்றும் 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

BSNL   ரூ.18 சலுகை அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.299 சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile