Bsnl யின் மூன்று புதிய பிராட்பேண்ட் சலுகை அறிவிப்பு, என்ன சுவாரஸ்யம்

Updated on 18-Aug-2020
HIGHLIGHTS

Bsnl நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகை எண்ணிக்கையை நீட்டித்து

200ஜிபி சிஎஸ்111 சலுகையில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா ரூ. 490 விலையில் வழங்கப்படுகிறது

புதிய சலுகைகள் 200 ஜிபி சிஎஸ்111, 300ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400ஜிபி என அழைக்கப்படுகிறது

Bsnl நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகை எண்ணிக்கையை நீட்டித்து உள்ளது. நொடிக்கு 50 எம்பி வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கும் மூன்று புதிய சலுகைகளை BSNL அறிவித்து இருக்கிறது.

200ஜிபி சிஎஸ்111 சலுகையில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா ரூ. 490 விலையில் வழங்கப்படுகிறது. 300 ஜிபி சிஎஸ்112 சலுகையின் கட்டணம் ரூ. 590 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பியுஎன் 400 ஜிபி சலுகையில் மாதம் 400 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

புதிய சலுகைகள் 200 ஜிபி சிஎஸ்111, 300ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400ஜிபி என அழைக்கப்படுகிறது. இவை அதிகபட்சம் 400 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகின்றன. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 490 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பியுஎன் 400 ஜிபி சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையையும் வழங்குகிறது.

BSNL 200 ஜிபி சிஎஸ்111 மற்றும் 300 ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400 ஜிபி சலுகைகள் தற்சமயம் பஞ்சாப் வட்டாரத்தில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய சலுகைகள் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :