BSNL யின் அதிரடி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகை

HIGHLIGHTS

, பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், பி.எஸ்.என்.எல். டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று (டிசம்பர் 25) துவங்கி ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்களின் பிரீபெயிட் சேவை கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தின. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ 2020 புத்தாண்டு சலுகையை அறிவித்தது. இந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது.

BSNL ரூ. 1999 சலுகையில் கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், புத்தாண்டு சலுகையின் கீழ் வேலிடிட்டி 425 நாட்கள் கிடைக்கும். 

இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 450 சலுகையில் ரூ. 500 டாக்டைம், ரூ. 250 சலுகையில் ரூ. 275 டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜனவரி 2, 2020 வரை வழங்கப்படுகிறது. 

இந்த சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், பி.எஸ்.என்.எல். டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று (டிசம்பர் 25) துவங்கி ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :