BSNL யின் அதிரடி 4 மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவை

HIGHLIGHTS

BSNL அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது

பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அந்தமான் நிகோபர் தீவுகள் தவிர்த்து நாடு முழுக்க ஒரே கட்டண முறையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பாரத் பைபர் மற்றும் டி.எஸ்.எல். சந்தாதாரர்களுக்கு அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது. இதே சலுகை பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
 
நான்கு மாதங்களுக்கான இலவச சேவையை பெற பாரத் பைபர், டி.எஸ்.எல்., லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை வாடிக்கையாளர்கள் ஒரே கட்டமாக 36 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்படி 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 40 மாதங்களுக்கு சேவையை பயன்படுத்தலாம்.

அந்தமான் நிகோபர் தீவுகள் தவிர்த்து நாடு முழுக்க ஒரே கட்டண முறையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பாரத் பைபர் சேவையில் பைபர்-டுஹோம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 449 முதல் துவங்குகிறது.

36 மாதங்கள் மட்டுமின்றி 24 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது மூன்று மாதங்களும், 12 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது கூடுதலாக ஒரு மாதத்திற்கும் இலவச பிராட்பேண்ட் சேவையை பெறலாம். இந்த சலுகையை பெற 1800003451500 என்ற எண்ணிற்கு காலிங்கை மேற்கொள்ள வேண்டும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :