BSNL மற்றும் Vi உடன் இணைகிறது என்ற அரசல் புரசல் பேச்சு, இதனால் என்ன நன்மை

HIGHLIGHTS

தனியார் மற்றும் அரசு நிறுவனமும் ஒன்று இனைந்து செயல்படுவதர்க்கான தயார் நடந்து வருகிறது

ன Vodafone idea (VI) யின் நடுவில் ஸ்பெக்ட்ரம் ஷேரிங் மற்றும் பைபர் கவரேஜ் கொண்டு பேச்சு வரத்தை நடந்து வருகிறது,

இனி நெட்வொர்க் கவரேஜ் பிரச்சனை மற்றும் பிரெண்ட்பேண்ட் கனெக்டிவிட்டி நன்மை பெறலாம்.

BSNL மற்றும் Vi உடன் இணைகிறது என்ற அரசல் புரசல் பேச்சு, இதனால் என்ன நன்மை

இந்திய டெலிகாம் நிறுவனங்களான தனியார் மற்றும் அரசு நிறுவனமும் ஒன்று இனைந்து செயல்படுவதர்க்கான தயார் நடந்து வருகிறது. இதில் அரசின் BSNL நிறுவனமும் மற்றும் தனியார் டெலிகாம் நிறுவனமான Vodafone idea (VI) யின் நடுவில் ஸ்பெக்ட்ரம் ஷேரிங் மற்றும் பைபர் கவரேஜ் கொண்டு பேச்சு வரத்தை நடந்து வருகிறது, அதாவது BSNL மற்றும் VI ஒன்று சேர்வது மூலம் பல நன்மை பெற முடியும், இனி நெட்வொர்க் கவரேஜ் பிரச்சனை மற்றும் பிரெண்ட்பேண்ட் கனெக்டிவிட்டி நன்மை பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL-Vi யின் அரசால் புரசலாக பேச்சு

அரசின் BSNL மற்றும் VI ஒன்று இணைவதை குறித்து Mint அறிக்கை கூறிகிறது இதை தவிர டெக் நிபுணர் அபிஷேக் யாதவ் இதை பற்றி X twitter பக்கத்தில் போஸ்ட் ஒன்று ஷேர் செய்துள்ளார் அதில் வோடபோன் ஐடியா மற்றும் BSNL டவர், பைபர் மற்றும் ஸ்பெக்ட்ரம் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறி இருந்தார், மேலும் இதனை தொடர்ந்து தற்போது இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் முறையே 430 மில்லியனுக்கும் அதிகமான மற்றும் 480 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டையும் இணைத்தாலே, இந்த இரண்டு நிறுவனங்களை விட குறைவான பயனர்களையே கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றம் குளு உறுதிப்படுத்தியது

மார்ச் 16 அன்று மக்களவை இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதில், விஐ (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தொலைத்தொடர்பு செயலாளர் சமித் அகர்வால் ஒரு நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த இணைப்பு தொடருமா என்பது பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே தெரியவரும். இதற்கிடையில், கோடா நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழு, இரு நிறுவனங்களுக்கும் இடையேயான உள்கட்டமைப்புப் பகிர்வு குறித்து முடிவெடுப்பதில் உதவுமாறு தொலைத்தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க கம்மி விலையில் முன்பை விட அதிக நன்மை அசத்தும் BSNL, 72 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2.5ஜிபி அன்லிமிடெட் காலிங்

மற்றொரு பெரிய டெலிகாம் இணைப்பு

2016-ல் ஜியோவின் அறிமுகத்திற்குப் பிறகு டெலிகாம் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. பல டெலிகாம் நிறுவனங்கள் மூடப்பட்டன. அந்த நேரத்தில், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைவதாக அறிவித்தன. இந்த இணைப்பைத் தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஆனது. இருப்பினும், சில மாதங்களுக்குள், சந்தாதாரர் எண்ணிக்கையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வோடஃபோன் ஐடியாவை விஞ்சின. ஏஜிஆர் நிலுவைத் தொகைகள் காரணமாக வோடஃபோன் ஐடியா தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தது, இது நிறுவனத்தின் நெட்வொர்க் விரிவாக்கத்தைத் தாமதப்படுத்தியது. 5ஜி அலைக்கற்றையை வாங்கிய போதிலும், அதைச் செயல்படுத்த மூன்று ஆண்டுகள் ஆனது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo