BSNL யின் அதிரடி திட்டம் 425 நாட்களுக்கு வேலிடிட்டி.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 26 Feb 2022
HIGHLIGHTS
  • பி.எஸ்.என்.எல். ரூ. 2399 பிரீபெயிட் சலுகையில் 60 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது

  • BSNL வேலிடிட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு 425 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது

  • ரூ. 2399 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

BSNL யின் அதிரடி திட்டம்  425 நாட்களுக்கு வேலிடிட்டி.
BSNL யின் அதிரடி திட்டம் 425 நாட்களுக்கு வேலிடிட்டி.

பி.எஸ்.என்.எல். ரூ. 2399 பிரீபெயிட் சலுகையில் 60 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது. அதன்படி இந்த சலுகை வேலிடிட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு 425 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ரூ. 2399 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், இரோஸ் நௌ சந்தாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டி நீட்டிப்பு பற்றிய அறிவிப்பு தமிழகத்துக்கான பி.எஸ்.என்.எல். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலை பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 500 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.  

இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 1499 விலையிலும் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: BSNL Rs. 2,399 Prepaid Recharge Plan Gets 60 Days of Additional Validity Under Limited Period Offer
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status