730GB டேட்டா 1 வருட வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங், டேட்டா.

HIGHLIGHTS

BSNL மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது 2ஜிபி தினசரி டேட்டா வவுச்சரை சிறந்த திட்டமாக கொண்டுள்ளது

இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவை மட்டும் வழங்கவில்லை,

BSNL இன் 'Data_1515' வவுச்சர் முழு 365 நாட்கள் வேலிடிட்டியாகும்

730GB  டேட்டா 1 வருட வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங், டேட்டா.

மற்றவர்களை விட அதிக டேட்டாவைப் பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், BSNLன் நீண்ட கால திட்டங்களை நீங்கள் விரும்புவீர்கள். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது 2ஜிபி தினசரி டேட்டா வவுச்சரை சிறந்த திட்டமாக கொண்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவை மட்டும் வழங்கவில்லை, இது தவிர, இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்ற பலன்களும் இந்த திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL அதன் 4G LTE சேவையை வழங்கும் பகுதிகளில், பயனர்கள் இந்த திட்டத்தில் சிறந்த இணைப்பு வேகத்தைப் பெறுவார்கள். இருப்பினும், தற்போது நிறுவனத்தின் 3G கவரேஜ் பகுதியில் இருக்கும் பயனர்களும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இது டேட்டா வவுச்சர், அதாவது தற்போதைய செயலில் உள்ள திட்டங்களில் ஒன்றைக் கொண்டு வாங்கலாம் மற்றும் கூடுதல் டேட்டாவைப் பெறலாம்.

டேட்டா பேக் 1 வருட வேலிடிட்டியுடன் கிடைக்கிறது

BSNL இன் 'Data_1515' வவுச்சர் முழு 365 நாட்கள் வேலிடிட்டியாகும் . அதாவது, ஒருமுறை ரீசார்ஜ் செய்த பிறகு, வருடம் முழுவதும் ரீசார்ஜ் செய்யும் தொல்லை முடிகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்தத் டேட்டா முடிந்ததும், வேகம் 40Kbps ஆக குறைகிறது.

பிஎஸ்என்எல்லின் இந்த 2ஜிபி தினசரி டேட்டா வவுச்சரைக் கொண்டு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், நீங்கள் ரூ.1,515 செலவழிக்க வேண்டும். இந்த திட்டத்துடன் அனைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்வதற்கான விருப்பத்தை பயனர்கள் பெறுகின்றனர் மேலும் இந்த திட்டம் நிறுவனம் வழங்கும் மிகவும் விலையுயர்ந்த திட்டங்களில் ஒன்றாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo