Airtel Black
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் முழுசா 3 மாதம் வேலிடிட்டியை வழங்குகிறது, ஏர்டெல்லின் புதிய சலுகை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இந்நிறுவனம் இன்டர்நெட் டேட்டாவை வழங்காத, ஆனால் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் அம்சங்களுடன் நீண்ட கால வேலிடிட்டியை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,469 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் என பார்த்தால் மற்றும் இதன் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் (சுமார் 3 மாதங்கள்) ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதியையும், அடிப்படைத் தகவல் தொடர்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் 900 மெசேஜ்களையும் வழங்குகிறது.இந்தத் திட்டத்தில் இன்டர்நெட் டேட்டா சேர்க்கப்படவில்லை. பயனர்களுக்கு டேட்டா தேவைப்பட்டால், அவர்கள் 1 நாள் அல்லது 2 நாட்களுக்குக் கிடைக்கும் தனி டேட்டா பேக்குகளை வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க:150 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் BSNL யின் பக்கவான பிளான் தினமும் 2GB மற்றும் 3GB டேட்டா உடன் வரும் சூப்பர் திட்டம்
இண்டர்நெட்டை குறைவாகப் பயன்படுத்தி, கால்கள் மற்றும் மேசெஜ்களின் மட்டும் கவனம் செலுத்தும் கஸ்டமர்களுக்கு ஏர்டெல்லின் இந்த ரூ,469 திட்டம் மிகவும் சிறந்தது.
ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,379 யில் வருகிறது, இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2GB ஹை ஸ்பீட் டேட்டா உடன் இந்த திட்டத்தில் மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கிஆல்கள் உட்பட அன்லிமிடெட் கால்கள் அடங்கும், மேலும் கஸ்டமர்கள் இதில் தினமும் 100 SMS அனுப்பலாம்.
இதை தவிர மற்ற நன்மைகள் பற்றி பார்த்தால், ஏர்டெல் இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது, இருப்பினும் சில நிபந்தனைகள் பொருந்தும். கூடுதலாக, கஸ்டமர்களுக்கு சுமார் ரூ,4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா 12 மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.