ஜியோ விலையுடன் போட்டி போட்டு கொண்டு அதன் பிளானை மாற்றியது ஏர்டெல்

ஜியோ விலையுடன்  போட்டி போட்டு  கொண்டு  அதன் பிளானை  மாற்றியது  ஏர்டெல்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ள போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கிவருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோ தனது மாத ரீசார்ஜ் மீதான கட்டணத்தை குறைத்துள்ளது. மேலும், சில திட்டங்கள் மீதான வேளிடிட்டியையும் அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

எனவே, ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.449 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி தற்சமயம் 82 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 SMS  வழங்கப்படுகிறது.

ரூ.509 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் கால்கள், தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.

ஏர்டெல் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 விலையில் புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் 50 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் கால்கள் , இலவச ரோமிங் வழங்கப்படுகிறது. இது மை இன்ஃபினிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile