4G VS 5G sim:: 4G சிம்மில் 5G சேவை எப்படி பெற முடியும்? அதை எப்படி பயப்பன்படுத்துவது?

HIGHLIGHTS

இந்தியாவில் 5G சேவை ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது

ஏர்டெல் மற்றும் ஜியோவின் 5ஜி சேவை 300க்கும் மேற்பட்ட நகரங்களில் லைவ் செய்யப்பட்டுள்ளது

ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்கள் 5G ஐப் பயன்படுத்த 5G சிம் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர்,

4G   VS 5G sim:: 4G சிம்மில் 5G  சேவை எப்படி பெற முடியும்? அதை எப்படி பயப்பன்படுத்துவது?

இந்தியாவில் 5G  சேவை ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது , ஏர்டெல் மற்றும் ஜியோவின் 5ஜி சேவை 300க்கும் மேற்பட்ட நகரங்களில் லைவ் செய்யப்பட்டுள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்ட பிறகு, 4ஜி சிம் கார்டில் 5ஜி சேவை இயங்குமா அல்லது அதற்கு புதிய 5ஜி சிம் வாங்க வேண்டுமா என்று பலரும் யோசித்து வருகின்றனர். இந்த கேள்விக்கணை பதில் இதோ இங்கே பார்த்து மகிழுங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

5ஜி சிம் அவசியம் தேவைப்படுமா?

ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்கள் 5G ஐப் பயன்படுத்த 5G சிம் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர், சமீபத்திய 4G சிம் வைத்திருப்பவர்கள் ஏற்கனவே 5G ஐ சப்போர்ட் செய்கின்றனர் . அதாவது 5ஜி சேவையை 4ஜி சிம்மில் மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், 5G சேவையை அனுபவிக்க பயனர்களுக்கு 5G ஸ்மார்ட்போன் (5G மொபைல்) தேவைப்படும். ,

இதன் அர்த்தம் என்னவென்றால் Airtel மற்றும் Reliance Jio பயனர்கள் 5G பயன்படுத்த புதிய சிம் கார்ட் வாங்க அவசியமில்லை தற்போதுள்ள 4ஜி சிம் 5ஜியில் வேலை செய்யும். ஆனால், உங்களிடம் அப்டேட் செய்யப்பட புதிய சிம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

4G SIM யில் 5G எப்படி பயன்படுத்துவது?

  • உங்கள் பகுதியில் 5G அறிமுகப்படுத்தப்பட்டதும், 4G சிம் கொண்ட உங்கள் 5G ஸ்மார்ட்போனில் சில செட்டிங்களை மாற்ற வேண்டும்.
  • முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் 'சேட்டிங்க்ளில் ' ஆப் திறக்கவும்.
  • அடுத்து, 'மொபைல் நெட்வொர்க்குகள்' செட்டிங்கை தேர்ந்தெடுக்கவும்.
  • 4ஜிக்கு பதிலாக 5ஜியை இயக்க விரும்பும் சிம்மைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இங்கிருந்து  ‘Preferred network type’ ஆப்ஷனை தேர்ந்தேடுக்கவும்.
  • அதன் பிறகு டேப் செய்து 5G நெட்வொர்க் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் பகுதியில் 5G அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த சில நிமிடங்களில் ஸ்டேட்டஸ் பட்டியில் 5G அடையாளத்தைப் பெறுவீர்கள்.

4ஜி சிம்மில் 5ஜி சேவையை எப்படி எளிதாக பெற முடியும்?

இதுகுறித்து இந்தியாவின் பிரபல மொபைல் பொறியாளர் அர்ஷ்தீப் சிங் நிப்பி கூறுகையில், “சிம் ஒன்றும் இல்லை. இது உங்கள் அடையாள எண்ணை அதாவது ஆபரேட்டருடனான உங்கள் அடையாளத்தை மட்டுமே கூறுகிறது. சிம்மில் அதன் சொந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லை. சிம்மில் இருந்தே 3ஜி, 4ஜி அல்லது 5ஜி சேவை கொடுக்கப்பட்டிருந்தால், சிம் இல்லாத போன்கள் எப்படி வேலை செய்யும் இன்று உலகெங்கிலும் உள்ள பல போன்கள் இ-சிம் தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன, மேலும் அவை நன்றாக வேலை செய்கின்றன. அவர்கள் 2G, 3G, 4G மற்றும் 5G ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், 5ஜி சேவையை வழங்க புதிய சிம் தேவையில்லை. அத்தகைய சூழ்நிலையில், 5G சேவை 4G அல்லது 3G சிம்மிலும் வேலை செய்ய முடியும் என்று நான் கூறுவேன். டெலிகாம் ஆபரேட்டர்கள் அப்டேட்களின் மூலம் அதை வழங்க முடியு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo