கூகுள் பே, போன் பே போல டாடா நியு 7 தேதி அசத்தலான சலுகையுடன் அறிமுகமாகும்.
இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த சேவை வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
Surveyஇந்நிலையில் தற்போது டாடா குழுமமும் இந்த துறையில் இறங்கியுள்ளது. டாடா குழுமத்தின் யூ.பி.ஐ செயலிக்கு ‘டாடா நியு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது. டாடாவின் இந்த நியு சேவை, பிற யூபிஐ செயலிகளை விட அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை பணம் பரிவர்த்தனை நடைபெறும்போதும் பயனர்களுக்கு நியுகாயின்ஸ் வழங்கப்படும். இந்த நியுகாயின்ஸை டாடாவின் பிற சேவைகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. இதே வகையில் டாடா நியு செயலியிலும் பல வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளன. இவற்றிருக்கு டாடா ‘நியுகாயின்ஸ்’ என பெயரிட்டுள்ளது.
மேலும் இந்த செயலியிலேயே டாடாவின் பிற டிஜிட்டல் சேவைகளும் இணைக்கப்பட்டு, அனைத்து டாடா டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
