தளபதி விஜய்யின் BEAST இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் கொண்டாட்டத்தில் மக்கள்.

HIGHLIGHTS

விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் இன்று கோலாகல ரிலீஸ்

அதிகாலை 4 மணிக்கே குவிந்த சர்ப்ரைஸ் கொடுத்த கோவை

பேனர்கள் வைத்து, படங்களுக்கு மாலையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

தளபதி விஜய்யின் BEAST இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ்  கொண்டாட்டத்தில் மக்கள்.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிக்கும் 65வது படமாகும். திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். 2022 ஏப்ரல் 13ல்  ஆனா இன்று முதல் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள `பீஸ்ட்' படத்திற்கு அவரது ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று இரவு முதலே திரையரங்குகள் திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தது. படத்தினை வரவேற்கும் விதமாக நடிகர் விஜய் ரசிகர்கள் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து வந்தனர் 
.
சிறிய அளவில் பேனர்கள் வைத்து, படங்களுக்கு மாலையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி நள்ளிரவு முதலே ரசிகர்கள் பட்டாளம் திரண்டு விட்டது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திரையரங்குகள் முன்பாக பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கே இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் திரையரங்கில் குவிந்து விட்டனர்.

இதில் திரையரங்க வளாகத்திற்குள் வண்ண வண்ண விளக்குகளுக்கு மத்தியில் விதவிதமான விஜய் பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile