ஆதருடன் லிங்க் செய்யாத பான் கார்ட் இனி செல்லாது, உடனே லிங்க் செய்யுங்க.

HIGHLIGHTS

வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது

'வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும்

ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

தற்போது இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள பொது அறிவுறுத்தல் நோட்டீசில், 'வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேநேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.

இவற்றைத் தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.

ஒரு SMS லிருந்து பேன் கார்டுடன் ஆதார்  லிங்க் செய்யலாம் 

  • பேன் கார்டிலிருந்து ஆதரை SMS  மூலம் லிங்க் செய்யலாம், முதலில் நீங்கள் உன் கல் போனிலிருந்து UIDPN டைப்  செய்து  ஸ்பேஸ்  விட வேண்டும்
  • அதன் பிறகு  ஆதார்  நம்பரை டைப்  செய்ய வேண்டும்
  • இதன் பிறகு மீண்டும் ஒருமுறை ஸ்பேஸ் விடவேண்டும் மற்றும் பேன் டைப்  செய்து (UIDPN -space- Aadhar no. Pan no). போல செய்யவேண்டும்
  • இப்பொழுது இந்த மெசேஜை 567678 அல்லது 56161 யில் அனுப்ப வேண்டும் அதன் பிறகு உங்கள் ஆதார் பேன் உடன் லிங்க் ஆகிவிடும்.

ஆதார் – பான் கார்டு இணைப்பது எப்படி?

  • முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ தளம் http://www.incometax.gov.in செல்ல வேண்டும்.
  • அதில், quick links ஆப்ஷனில் Link Aadhaar கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து தோன்றும் திரையில், பான் நம்பர், ஆதார் எண், பெயர், மொபைல் நம்பர் பதிவிட வேண்டும்.
  • விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்துவிட்டு, ‘I validate my Aadhaar details’ ஆப்ஷன் சேலக்ட் செயது, Continue ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் ரெஜிஸ்டர் செய்த நபருக்கு, one time password அனுப்பப்படும். அதனை கேட்கும் இடத்தில் டைப் செய்து, Validate கொடுக்க வேண்டும்.
  • தொடர்ந்து, அபராத தொகையை செலுத்தியபின், பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படும்.

மேலும், 'இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்' என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :