மார்ச் 31க்குள் இதை செய்யாவிட்டால் ரூ.10,000 வரை அவதாரம் விதிக்கப்படும்.

HIGHLIGHTS

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

ரூ.10,000 வரை அபராதம் செலுத்த நேரிடலாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

மார்ச் 31க்குள் இதை செய்யாவிட்டால் ரூ.10,000 வரை அவதாரம் விதிக்கப்படும்.

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, வருமான வரித்துறையின் இணையதளத்தை நாடலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பலமுறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த இணைப்பை செய்யத் தவறுவோருக்கு, பான் அட்டை முடக்கப்படுவதுடன், ரூ.10,000 அபராதம் வரை செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, பான் கார்டு முடக்கப்பட்டு பயனற்றது ஆகிவிட்டால், அந்தப் பயனற்ற பான் எண்ணைப் பயன்படுத்தும்போது, ரூ.10,000 வரை அபராதம் செலுத்த நேரிடலாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஆதார் பான் கார்ட் லிங்க் செய்வது எப்படி?

1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

2. தளத்தின் இடப்பக்கத்தில் உள்ள Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.
7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய: மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar இணைப்புக்குக் கிழே Link Aadhaar status இணைப்பை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.
பின்னர், கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு பான்-ஆதார் எண் இணைப்புக்கு மத்திய அரசு கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடு மார்ச் 31 உடன் நிறைவடைகிறது என்பதால் பான்-ஆதார் எண் இணைப்பில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile