மகான் திரைப்படம் உட்பட OTT யில் ரிலீசான டாப் 5 மூவி
கொரோனா தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில், OTT மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கும் வழக்கம், மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது
மக்களும் அதிக ஆர்வத்துடன் இருப்பதால், திரையரங்கில் வெளிவராமல், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும்
OTT தளங்களில், பிப்ரவரி மாதம் வரும் 5 அதிரடி திரைப்படங்கள் என்னவென்று பார்ப்போம்.
கொரோனா தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில், OTT மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கும் வழக்கம், மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மக்களும் அதிக ஆர்வத்துடன் இருப்பதால், திரையரங்கில் வெளிவராமல், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, தியேட்டர்களில் வரும் படங்கள், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு, ஓடிடி தளத்தில் வெளியாகும். அப்படி நேரடியாகவும், தியேட்டர் ரிலீஸின் வெற்றிக்கு பிறகும், OTT தளங்களில், பிப்ரவரி மாதம் வரும் 5 அதிரடி திரைப்படங்கள் என்னவென்று பார்ப்போம்.
Survey
மகான் ( Mahaan )
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார். இதனையடுத்து, சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.நேரடியாக OTT இயங்குதளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் 'மகான்' படம் மூன்று மொழிகளில் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ OTT இயங்குதளத்தில் வெளியாகி வெற்றி நடைப்போடுகிறது.
கெஹ்ரையான்- Gehraiyaan
தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஹ்ரையான்’. வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. நவீன காதலர்களையும், அவர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்களையும் ஒரு முக்கோணக் காதல் வழியாக சொல்லும் படமாக தெரிகிறது ‘கெஹ்ரயான்’. தீபிகா – சித்தாந்த் இடையிலான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரிதளவில் கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கேற்ற சில ‘போல்ட்’ ஆன காட்சிகளும் ட்ரெய்லர் முழுக்க வருகின்றன

Pushpa: The Rise
புஷ்பா: தி ரைஸ் அமேசான் பிரைம் வீடியோவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னால், ஆந்திரா மற்றும் தமிழக எல்லையோரக் காடுகளில் காணப்படும் சிவப்புச் சந்தனக் கட்டைகளின் வெளிநாட்டுக் கடத்தல் குறித்த படம். போர்ட்டர் வேலை செய்து கொண்டே நம்பர் 1 கடத்தல்காரனாக வரும் ஒருவனின் கதை இது.
The Family Man 2
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

