ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் விரைவில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி ஒவர் தி ஏர் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வாட்ச் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
ஒன்பிளஸ் வாட்ச் மாடல் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடல்களான ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும்பாலான பயனர்கள் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இந்த கோரிக்கை ஒடிஏ அப்டேட் மூலம் நிறைவேற்றப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருந்தாலும், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி ஸ்மார்ட்வாட்ச் சார்ஜிங் பயன்பாட்டை 50 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளும். ஒன்பிளஸ் அறிமுகம் செய்திருக்கும் முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற வகையில் இது பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile