நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.லிஸ்ட் இதோ

HIGHLIGHTS

நவம்பர் 2022 -ம் ஆண்டு தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வரவுள்ளது

இந்த பட்டியலில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள பிரமாண்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

நவம்பர் 2022 -ம் ஆண்டு தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வரவுள்ளது. எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த பக்கத்தின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த பக்கத்தில் அறிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் அதிகாரபூர்வமான அறிவிப்பின் அடிப்படையில் தான் பதிவிடப்படுகிறது. இந்த பட்டியலில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள பிரமாண்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

இந்த வாரம் வரும் 4ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகப் போகும் படங்களின் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்…

காஃபி வித் காதல் – Coffee with Kadhal.

காஃபி வித் காதல் – ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, சம்யுக்தா, அம்ரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் காஃபி வித் காதல் உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி ஜானரான இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

நித்தம் ஒரு வானம் – nitham oru Vaanam

நித்தம் ஒரு வானம் – அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பால முரளி, ஷிவாத்மிகா நடிப்பில் காதல் படமாக உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை  பெற்றுள்ளது.

லவ் டுட– Love Today

லவ் டுடே – ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவானா, யோகி பாபு, சத்யராஜ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

4554 –

4554 – முருகா, கோழி கூவுது படங்களில் நடித்த அசோக் குமார் 4554 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் ஒரு காரின் நம்பராகும். காரை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. போதிய புரொமோஷன் இல்லாததால் இந்தப் படம் அதிகம் கவனம் பெறவில்லை.

கண்டேன் உன்னை தந்தேன் என்னை –

கண்டேன் உன்னை தந்தேன் என்னை – தங்கவேலு கண்ணன் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம். ரொமான்டிக் ஜானரில் வெளிவருகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :