Netflix நிறுவனம் விரைவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும்.

HIGHLIGHTS

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகளை வழங்கும்

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது சலுகைகள் விலை எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது.

புதிய சலுகைகள் அதிக பணம் சேமித்து தரும் வகையில் காணப்படுகின்றன

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது சலுகைகள் விலை எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்க விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய சலுகைகள் அதிக பணம் சேமித்து தரும் வகையில் காணப்படுகின்றன. இதோடு ஏராளமான புது வாடிக்கையாளர்களை சேவைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் நெட்ப்ளிக்ஸ் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை 7இல் இருந்து அதிகபட்சம் 9 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 559 முதல் ரூ. 719 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்க சந்தையில் தற்போது நெட்ப்ளிக்ஸ் மாதாந்திர சலுகைகள் விலை 9.99 டாலர்களில் தொடங்கி 19.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,239 முதல் ரூ. 1599 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புது சலுகைகள் விலை கணிசமான அளவு குறைவு தான் எனலாம். விலை மட்டுமின்றி விளம்பரங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், ஒரு மணி நேரத்திற்கு நான்கு நிமிடங்கள் வரை விளம்பரங்கள் வரும் என கூறப்படுகிறது. இவை நிகழ்ச்சி தொடக்கம், மத்தியில் வரும் என தெரிகிறது. முந்தைய தகவல்களில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை வித்தியாசமாக இருக்கும். தற்போது நெட்ப்ளிக்ஸ் பேசிக் மொபைல் பிளான் விலை மாதம் ரூ. 149 என தொடங்குகிறது. அந்த வகையில் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை ரூ. 100க்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :