நெட்ஃபிலிக்ஸ் அறிமுகம் செய்த Two Thumbs Up அம்சம் இதனால் என்ன நன்மை..

HIGHLIGHTS

நெட்பிளிக்ஸ், தனது பயனர்களுக்குப் பல வசதிகளை செயல்படுத்தி வருகிறது

நெட்ஃபிலிக்ஸ் தற்போது ‘Two Thumbs up' என்ற அம்சத்தை கொண்டு வருகிறது

Two Thumbs Up கிளிக் செய்து தனது விருப்பதை தெரிவிக்கலாம்.

நெட்ஃபிலிக்ஸ்  அறிமுகம் செய்த Two Thumbs Up அம்சம் இதனால் என்ன நன்மை..

நாடெங்கிலும் அதிக பயனர்களைக் கொண்டுள்ள ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், தனது பயனர்களுக்குப் பல வசதிகளை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக, படைப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும், தரமான படைப்புகளைச் சந்தாதாரர்கள் பார்வைக்கு எடுத்துச் செல்லவும் நிறுவனம் புதிய அம்சங்களை தனது தளத்தில் சேர்த்து வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்நிலையில் நெட்ஃபிலிக்ஸ் தற்போது ‘Two Thumbs up' என்ற அம்சத்தை கொண்டு வருகிறது. பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படும் பகுதியை மேம்படுத்தப்படுத்துவதற்காக இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போத் நெட்ஃபிலிக்ஸில் தம்ஸ் அப், தம்ஸ் டவுன் என்ற இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இதில் தம்ஸ் அப் எனக்கு பிடித்துள்ளது என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தம்ஸ் டவுன் எனக்கு பிடிக்கவில்லை என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தம்ஸ் அப் பட்டன், இந்த வீடியோ எனக்கு மிக விருப்பமானதாக இருக்கிறது என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளத்ஹு
 
இப்போது ஒரு நிகழ்ச்சி அல்லது திரைப்படத்திற்கு இரண்டு தம்ஸ் அப் பட்டனை ஒருவர் தருகிறார் என்றால், அவருக்கு அதே வகையான நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் அல்லது அதே இயக்குநர் இயக்கிய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ‘Two Thumbs Up' என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நெட்ஃபிலிக்ஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தை பார்த்த பயனர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த வீடியோக்களுக்கு பக்கத்தில் இருக்கும் Two Thumbs Up கிளிக் செய்து தனது விருப்பதை தெரிவிக்கலாம்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் என அனைத்து வகையான தளங்களிலும் இந்த இரட்டை தம்ஸ்அப் பட்டன் வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் அந்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை போலவே இருக்கும் மற்ற திரைப்படங்களை அல்லது அந்த திரைப்பட இயக்குநரின் மற்ற படைப்புகளை நெட்ஃபிலிக்ஸ் பரிந்துரை செய்யும் என கூறப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile