Redmi Note 9 இந்தியாவில் 5,020mAh உடன் Rs, 11999 விலையில் அறிமுகம்.

Redmi Note 9 இந்தியாவில் 5,020mAh உடன் Rs, 11999 விலையில் அறிமுகம்.
HIGHLIGHTS

Redmi Note 9 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் அறிமுகம்

இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11999 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13499

ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது.

சியோமியின் Redmi Note 9  ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது. 

விலை தகவல் 

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் பெபிள் கிரே, ஆர்க்டிக் வைட் மற்றும் அக்வா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11999 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Redmi Note 9 சிறப்பம்சங்கள்

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
– 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
– கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி
– 5020 எம்ஏஹெச் பேட்டரி
– 22.5 வாட் சார்ஜர்
– 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங்

புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக்  ஹீலியோ ஜி85 பிராசஸர்வழங்கப்பட்டுள்ளது 

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo