XIAOMI BLACK SHARK 2 கேமிங் ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று.

Updated on 04-Jun-2019
HIGHLIGHTS

லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

XIAOMI யின் ப்ளாக் ஷார்க் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் முதல் விற்பனைக்கு வருகிறது

பிளாக் ஷார்க் நிறுவனம் இந்தியாவில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாதத்தில் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR . வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க லுட்ரிகஸ் மோட் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்துடன் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு.-வில் ஏற்படும் வெப்பத்தை அதிகபட்சம் 14 சதவிகிதம் வரை குறைக்கும். 

விலை மற்றும் விற்பனை 

XIAOMI யின் ப்ளாக் ஷார்க் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் முதல் விற்பனைக்கு வருகிறது இதனுடன் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ.39,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ஷேடோ பிளாக் நிறத்திலும் 12 ஜி.பி. ரேம் மாடல் ஃபுரோஸன் சில்வர் நிறத்திலும் கிடைக்கிறது. மேலும் நாம்  இதன் ஆபர் பற்றி பேசினால், 4,445ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள்  Axis Bank  மூலம் வாங்கினால்,10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது 

பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சாம்சங் GM1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 1/3.6″ சாம்சங் S5K3M5, f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 2x சூம்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இதனுடன் இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சிக்னல் சீராக கிடைக்க X-வடிவத்தில் பிரத்யேக ஆண்டெனா வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்.ஜி.பி. லோகோ, டிஸ்ப்ளேவில் பிரெஸ் சென்சிட்டிவ் கண்ட்ரோல்கள், ஏ.ஐ. கேமிங் அனுபவம் வழங்கப்பட்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :