வேற லெவல் ஆபர் Xiaomi யின் இந்த புது போனுக்கு அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Xiaomi 17T இப்பொழுது இந்தியாவில் விற்பனை மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம்

இப்பொழுது அறிமுக சலுகையாக ரூ,5000 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்தத் போன் Leica பிராண்டிங் கொண்ட 50MP மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

வேற லெவல் ஆபர் Xiaomi யின் இந்த புது போனுக்கு அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்

Xiaomi 17T இப்பொழுது இந்தியாவில் விற்பனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் இப்பொழுது மிக குறைந்த விலையில் வாங்கலாம் அறிமுக சலுகையாக ரூ,5000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், இந்த போனில் இந்தத் போன் Leica பிராண்டிங் கொண்ட 50MP மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 8500-Ultra சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும், நிறுவனம் இதில் 67W HyperCharge வேகமான சார்ஜிங் வசதி மற்றும் பல AI-சார்ந்த ஸ்மார்ட் அம்சங்களையும் வழங்குகிறது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi 17T டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போனின் 12GB + 256GB வேரியன்ட் ₹59,999 என்ற விலையிலும், 12GB + 512GB வேரியன்ட் ₹64,999 என்ற விலையிலும் கிடைக்கிறது. இருப்பினும், முழு ஸ்வைப் அல்லது கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ₹5,000 உடனடி வங்கித் தள்ளுபடி கிடைக்கிறது. இந்தத் டிஸ்கவுண்ட்க்கு பிறகு, 256GB மாடல் ரூ,54,999 என்ற விலையிலும், 512GB மாடல் ரூ,59,999 என்ற விலையிலும் கிடைக்கும்.

கூடுதலாக, நிறுவனம் ரூ. 5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது. இருப்பினும், இந்தச் சலுகையை பேங்க் தள்ளுபடிகளுடன் இணைக்க முடியாது. கஸ்டமர்கள் ஒரு வருடத்திற்கு ஃபோனின் இன்வாய்ஸ் மதிப்பில் 60% வரை பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வாராண்டி அளிக்கும் இலவச அஷ்யூர்ட் பைபேக் திட்டத்தையும் பெறுவார்கள். சலுகைகள் இத்துடன் முடிவதில்லை. சியோமி 17T உடன் மூன்று மாதங்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ, யூடியூப் பிரீமியம் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாக்கள், 5TB கூகுள் ஜெமினி ப்ரோ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நான்கு மாதங்களுக்கான ஸ்பாட்டிஃபை பிரீமியம் ஸ்டாண்டர்ட் ஆகியவையும் வருகின்றன.

இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அமேசான், சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக விற்பனைக்குக் கிடைக்கிறது. இதை நீங்கள் கருப்பு, நீலம் மற்றும் ஊதா ஆகிய மூன்று கலர்களில் வாங்கலாம்.

Xiaomi 17T சிறப்பம்சம்.

Xiaomi 17T யின் அம்சங்களை பற்றி பேசினால், 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் 3,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் இது Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. சியோமி 17T, MediaTek’s Dimensity 8500-Ultra பிராசஸர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மாலி-ஜி720 ஜிபியு (GPU) மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட், 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Xiaomi யின் இந்த போனில் 3D IceLoop கூலிங் சிஸ்டம் நீங்கள் எவ்வளவு நேரம் கேமிங் விளையாடினாலும் சூடகது மேலும் கேமிங் மற்றும் ஹை இன்ட்டேன்சிட்டி டாஸ்க் பயன்படுத்தலாம்

மேலும் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Leica-ப்ரேண்டேட் மூன்று கேமரா செட்டப் உடன் 50MP லைட் பியுசியன் 800 ப்ரைமரி கேமரா உடன் 50MP 5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் உடன் 120x டிஜிட்டல் ஜூம் 120x மற்றும் 12MP அல்ட்ரா வைட் என்கில் கேமரா வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் செல்பிக்கு 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க தூக்குங்கட அந்த தங்கத்தை Motorola யின் இந்த மாடலில் ரூ,9,000 வரை டிஸ்கவுண்ட்

சியோமி 17T, 67W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3- இல் இயங்குகிறது , மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்களும், ஆறு ஆண்டுகளுக்குப் பாதுகாப்புப் பேட்ச்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர கனேக்டிவிட்டிக்கு 5G, Wi-Fi 7, Bluetooth, NFC, GPS, மற்றும் a USB Type-C port வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile