Xiaomi 13 சீரிஸ் வெளியிட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..

Updated on 28-Nov-2022
HIGHLIGHTS

சியோமி நிறுவனம் சியோமி 13 சீரிஸ் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சியோமி 13 சீரிசில்- சியோமி 13, சியோமி 13 ப்ரோ மற்றும் MIUI 14 உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

சியோமி 13 ப்ரோ மாடலில் 1-இன்ச் சோனி IMX989 சென்சார், சியோமி 13 மாடலில் 50MP சோனி IMX8 சீரிஸ் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் சியோமி 13 சீரிஸ் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக சியோமி 13 சீரிஸ் மாடல்கள் டிசம்பர் 01 ஆம் தேதி அறிமுகமாகிறது. சியோமி 13 சீரிசில்- சியோமி 13, சியோமி 13 ப்ரோ மற்றும் MIUI 14 உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக தனது அடுத்த ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வகையில், சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்களில் இந்த பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சியோமி 13 மாடலில் 6.2 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் சாம்சங் 2K E6 AMOLED வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

சியோமி 13 ப்ரோ மாடலில் 1-இன்ச் சோனி IMX989 சென்சார், சியோமி 13 மாடலில் 50MP சோனி IMX8 சீரிஸ் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் OIS சப்போர்ட் வழங்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டீசரின் படி சியோமி 13 ஸ்மார்ட்போன் ஃபிளாட் ஸ்கிரீன், மற்றொரு மாடலில் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. முந்தைய மாடல்களை போன்றே இரு மாடல்களிலும் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படுகிறது. சியோமி 13 மாடலில் உள்ள ஃபிளாட் ஸ்கிரீன் உயர் ரக OLED பேனல், அல்ட்ரா நேரோ பெசல்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த போன்களில் லெய்கா ஆப்டிக்ஸ் வழங்கப்படுகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :